கடத்தல் முயற்சியுடன் தொடர்படைய இருவர் விமான நிலையத்தில் கைது
ஒரு கோடியே 17 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்டுக்களை உடம்பினுள் மறைத்து கடத்த முற்பட்ட சந்தேக நபர் ஒருவரை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து சுங்க பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தெமட்டகொடை பிரதேசத்தைச் சேர்ந்தவர் (54 வயது ) எனவும், நிறுவனம் ஒன்றின் தலைவர் எனவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக விமான நிலைய சுங்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, 35 இலட்சத்து 76ஆயிரம் ரூபா பெறுமதியான அமெரிக்க டொலர்களை தாய்லாந்துக்கு கடத்த முயற்சித்த அந்நாட்டு பெண்ணொருவரையும் விமான நிலைய சுங்கப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
0 comments :
Post a Comment