இங்கிலாந்தில் அதிகரிக்கும் இன விரோத கொலைகள்-மேலும் இரு இந்தியர்கள் கொலை
இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் இந்தியர் ஒருவரும் அவரது இங்கிலாந்து மனைவியும் கொலை செய்யப்பட்டுள்ளனர். இங்கிலாந்தில், கடந்த வாரம் அனுஜ் பித்வே என்ற 23 வயது இந்திய மாணவர் மர்ம மனிதர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். மான்செஸ்டர் நகரில் இந்த சம்பவம் நடந்தது.
இந்நிலையில் லண்டன் அருகே உள்ள பிர்மிங்காம் நகரில் வசித்து வந்த அவதார் சிங் கோலார் (62). அவரது மனைவி கரோல் (58) ஆகியோர் வீட்டிலேயே கொலையாகிக் கிடந்தனர்.
அவதார் இங்கிலாந்து வாழ் இந்தியர். கரோலின் சொந்த நாடு இங்கிலாந்து ஆகும். இவர்களது மகன் லண்டன் காவல்துறையில் பணியாற்றி வந்தார்.
இந் நிலையில் இன்று அவதார் சிங்கும், மனைவி கரோலேவும், ஹேண்ட்ஸ்வொர்த் உட் பகுதியில் உள்ள வீட்டில் பிணமாக கிடந்தனர். அவர்களது உடலில் பலத்த ஆயுதங்களால் தாக்கப்பட்டதற்கான அடையாளங்களும், துப்பாக்கி குண்டுகள் துளைத்த காயங்களும் உள்ளன.
கொலையாளிகள் இவர்களை ஆயுதங்களால் தாக்கியும், துப்பாக்கியால் சுட்டும் கொன்றுள்ளனர்.
மாயமான இந்திய மாணவரின் உடல் மீட்பு:
இந் நிலையில் கடந்த 8 நாட்களுக்கு முன் காணாமல் போன 20 வயது இந்திய மாணவரின் உடல் இன்று மாண்செஸ்டர் நகரில் கண்டெடுக்கப்பட்டது.
குர்தீப் ஹயர் என்ற அந்த மாணவர் காணாமல் போனதையடுத்து தேடப்பட்டு வந்தார். இந் நிலையில் அவரது உடல் கிடைத்துள்ளது.
இந்த எல்லா கொலைகளுமே இன விரோத கொலைகளாகவே கருதப்படுகின்றன.
0 comments :
Post a Comment