டெங்கு பரவும் அபாயம். அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கின்றது சுகாதார அமைச்சு.
இந்த நாட்களில் நிலவும் கால நிலை மாற்றம் மற்றும் பொதுவாக நுளம்புகள் விளையும் அளவுக்கு ஏற்ப எதிர் வரும் காலங்களில் நாடு பூரா பல மாவட்டங்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ள சுகாதார அமைச்சு மக்களை அவதானமாக இருக்குமாறு வேண்டியுள்ளது.
டெங்கு பரவுதலை தடுக்கும் பொருட்டு இம் மாதம் 16 ம் திகதியிலிருந்து 22 ம் திகதி வரை தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் மேற்கொள்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. அந்த டெங்கு ஒழிப்பு வாரம் தொடர்பாக இது வரைக்கும் நாடு பூராகவுள்ள சகல சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கும் அறிவித்தல் விடுத்துள்ளதாக அமைச்சு தெரிவிக்கின்றது.
அந்த வகையில் சகல சுகாதார வைத்திய அதிகாரப் பிரிவுகளிலுள்ள ஏழு வலயங்களில் குறிப்பிட்ட ஒரு நாளில் ஒரு வலயம் என்ற வகையில் குறிப்பிட்ட நுளம்பு ஒழிப்பு வேலைத் திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.
இந்த நுளம்பு வேலை ஒழிப்பு வேலைத்திட்டம் தொடர்பாக இந்த மாதம் 25 ம் திகதி வரை சகல சுகாதார வைத்திய அதிகாரப் பிரிவுகளுக்கும் சுகாதார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த வருடத்தில் கடந்த நாட்களில் இந்த நாட்டிலுள்ள பிரதேசங்களில் டெங்கு நோய்க்குள்ளானவர்கள் 200 பேர் அளவில் இனங் காணப்பட்டுள்ளனர் இதில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
0 comments :
Post a Comment