களவாக மின்சாரம் பெற்றோரிடமிருந்து 121 லட்சம் அபராதம் பெறப்பட்டது.
இலங்கையில் மோசடியாக மோசடியாக மின்சாரம் பயன்படுத்துவோருக்கு எதிராக கடும் சட்டங்கள் அமுல்ப்படுத்தப்படவுள்ளன. இம்N மாசடிகளை கட்டுப்படுத்தும்பொருட்டு இலங்கை மின்சார சபையினால் கடந்த டிசம்பர் மாதம் 106 சுற்றி வளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன. இதில் மின்சார கம்பிகளை பயன்படுத்தி மோசடியான முறையில் மின்சாரம் பெற்ற 25 பேர் பிடிபட்டதுடன் மேலும் 81 சுற்றிவளைப்புக்கள் மின்மாணியில் மாற்றங்களை ஏற்படுத்தி மின்சாரத்தை பெற்றோரும் மாட்டிக்கொண்டுள்ளனர்.
இவ்வாறு மோசடி செய்தவர்களிடமிருந்து மின்சாரசபை ஒரு கோடியே 21 இலட்சம் ரூபாவினை தண்டப்பணமாக பெற்றுக்கொண்டுள்ளது. வருமானமாக கிடைத்துள்ளது சம்பவங்களாகும்.
இவ்வருடம் முதல் மோசடியாக மின்சாரத்தை பெற்றுக் கொள்வோருக்கு மீண்டும் மின் இணைப்பை பெற்றுக் கொள்ள முடியாத வகையில் மின் துண்டிப்பை ஏற்படுத்துவதற்கான சட்டங்கள் அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சாரம் தொடர்பான மோசடிகள் எதுவும் இடம்பெற்றால் 0112422259 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு மின்சார சபை பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இவ்வாறு மோசடியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் சிலர் வடமராட்சி பிரதேசத்தில் மின்சாரம் பெற்றுவந்தமையை நாம் சில மாதங்களுக்கு முன்னர் சுட்டிக்காட்டியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் இவ்வாறு கள்ளக்கரண்ட பயன்படுத்தி பிடிபட்டுள்ளவர்களில் யாழ் உதயன் பத்திரிகையும் அடங்குவதாக அறிய முடிகின்றது.
0 comments :
Post a Comment