Friday, January 13, 2012

தடைசெய்யப்பட்ட மிகப்பயங்கரமான தண்டனைகள் :படங்கள் இணைப்பு

நாமெல்லாம் ரொம்ப அதிர்ஸ்டசாலிகள் இல்லை என்றாலும், இந்தக்காலத்தில் வாழ்வதால் கொஞ்ச அதிஸ்டசாலிகள் என்றே நினைக்கத் தோண்றுகின்றது, ஆமாங்க பழங்காலங்கள்ள வழங்கப்பட்ட தண்டனைகள் இந்தக்காலத்திலும் தொடர்ந்திருந்தால் நிச்சயமாக நாம் பாவம் செய்தவர்கள்தான், நம்பமுடியவில்லையா மேலே படியுங்கள்…

பழங்கால அரசுகள் தமக்கு எதிராகச் செயற்படுபவர்களுக்கு மரணதண்டனை வழங்குவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளன, இந்தக்காலத்திலும் சில அரசுகள் அவ்வாறு இருந்தாலும் பழங்கால அரசுகள் மரணதண்டனை வழங்கும் பாணியே மிகப் பயங்கரமானதாகத்தான் இருக்கும்,

பண்டைத்தமிழ்ச் சமூகங்களில்க் கூட பயங்கரமான தண்டனைகள் இருந்திருக்கின்றன, கழுவிலேற்றுதல்,சிரச்சேதம் போன்ற பலவிதமான தண்டனைகள் பண்டைத் தமிழ்ச் சமூகத்தில்க் கூட இருந்திருக்கின்றன, ஐரோப்பியர்கள்,ஆங்கெலேயர்களுக்கு ”கில்லட்” என்ற பெயரைக்கேட்டாலே நின்ற இடத்திலேயே உச்சாப் போய்விடும் வரலாறுகளும் உண்டு, இந்தக் கில்லட்டும் ஒரு சிரச்சேதம் செய்யும் ஆயுதம்தான் இதன்மூலம் ஐரோப்பியாவில் ஆங்காங்கே நடந்த புரட்சியின் போது கைதுசெய்யப்பட்ட லச்சக்கணக்கான மக்களை கொண்றுகுவித்த சம்பவங்கள் பல உண்டு,

இப்படிப்பட்ட புதுமையானதும் மிகக்கொடூரமானதுமான பல மரணதண்டனைச் சட்டங்கள் பழங்கால அரசுகளில் பரந்து காணப்பட்டன, இவற்றில் பழைமையானதும் மிக அண்மையில் வழக்கொழிக்கப்பட்டதுமான “கரோட்டி” எனும் தண்டனையைப் பற்றி சிரட்டை உங்களுக்கு சொல்ல விளைகின்றது…

கரோட்டி



இது மிகக் கொடூரமான ஒரு தண்டனை முறையாகக் கருதப்படுகின்றது, மேலே படத்தில் காட்டப்பட்டுள்ளதுபோல மரணதண்டனைக்கென்றே சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஒரு நாற்காலியில் குற்றவாளியை உட்கார வைப்பார்கள், குற்றவாளியின் கழுத்தை ஒரு உலோகச் சட்டத்தால் பிணைத்து அதனைத் பின்னால் இருந்து திருகி மரணதண்டனையை நிறைவேற்றுவார்கள்,

சில கரோட்டிகள் கழுத்தை உடைத்துக் கொலை செய்வனவாகவும், சில கரோட்டிகள் களுத்துக்குப் பின்னால் இருக்கும் ஒரு கூரிய ஆணியானது கைப்பிடியைச் சுற்றும்போது கழுத்தைக் கிழித்துக்கொண்டு உள்ளே செல்வதாகவும், சில கழுத்தை இறுக்கிக் கொல்வதாகவும் அமைந்திருக்கும்,

இதில் இரண்டாவது வகைக் கரோட்டிகள்தான் மிகவும் பயங்கரமானவை, மெல்ல மெல்ல கழுத்தினுள்ளே செல்லும் அந்த ஆணிதரும் வலியானது வார்த்தையால் விபரிக்கமுடியாதது…

இந்தத் தண்டனை 1978 ஆம் ஆண்டுவரை ஸ்பெயினில் பிரபலமாக இருந்தது பின்னர் 1978 இல் தடைசெய்யப்பட்ட தண்டனையாகப் பிரகடனப்படுத்தப் பட்டது, உலகம் முழுவதும் 1990 ஆம் ஆண்டு கரோட்டி மூலமான தண்டனைகள் உலகம் முழுவதிலும் தடைசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது,

என்னங்க நாம இருக்கிற இந்தக் காலத்திலயும் கரோட்டி அமலில் இருந்தா எப்படி இருக்கும்னு நினைக்கிறீங்களா…………என்ன கொடுமை சார் இது!!!




2 comments :

Aran Sridharan ,  January 14, 2012 at 9:57 AM  

Please check the wikipedia for the British murders in India under the title "Indian Rebellion of 1857" and look for the picture of "Blowing from Guns in British India 1884"

ARYA ,  January 15, 2012 at 1:49 AM  

LTTE too had many horror torture systems , more horror this old systems, example put snakes to prisoner at a underground jail or drilling at foot and iron at back of prisoner.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com