Friday, January 13, 2012

யாழில் முகத்திரை கவிதை நூல் வெளியீட்டு விழா – 2012

பலாலி ஆசிரியர் கலாசாலையின் ஆசிரிய மாணவி பிரியா அருள்பிரகாசத்தின் முகத்திரை கவிதை நூல் இன்று நடைபெற்றது. பலாலி ஆசிரியர் கலாச்சாலையில் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் ஆசியுரை அருட்தந்தை யூட் நிக்சன் அடிகள், வாழ்த்துரையை கே.கணபதிப்பிள்ளை, வெளியீட்டுரை எம்.கௌரிநாந்தன் ஆகியோர் வழங்கினர்.

இந்நிகழ்வில் நூலின் முதற்பிரதியை எஸ்.மரியதாஸ் பெற்றுக்கொண்டார்.

பலாலி ஆசிரியர் கலாசாலை அதிபர் ஆ.இக்னேசியஸ் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாணப் பெருந்தெருக்கள் அபிவிருத்தி திட்டமிடல் பணிப்பாளர் தேசகீர்த்தி மோசஸ் மரியதாஸன், சாந்தகுமாரி மரியதாசன்,

சிறப்புவிருந்தினராக கோப்பாய் ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளர் ஆர்.புவனஸ்வரன், யாழ் தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் எம்.கௌரிகாந்தன், பலாலி ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளர்கள், ஆசிரிய மாணவர்கள், ஆகியோர் கலந்துகொண்டனர்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com