முன்விரோதம் காரணமாக குடும்பஸ்தர் வெட்டியும் குத்தியும் கொலை - நீர்கொழும்பில் சம்பவம்
முன்விரோதம் காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் கூரிய ஆயுதங்களால் வெட்டியும் குத்தியும் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (13) மாலை 5.30 மணியளவில் நீர்கொழும்பு துங்கல்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
வர்ணகுலசூரிய அசித்த சரத்குமார (36 வயது) என்ற இரு பிள்ளைகளின் தந்தையே சம்பவத்தில் பலியானவராவார்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது ,
கொலை செய்யப்பட்டவருக்கும் அயல் வீட்டுக்காரருக்கும் இடையில் நீண்ட காலமாக தொழில் ரீதியில் பிரச்சினை இருந்;து வந்துள்ளது.இரு தரப்பினரும் சட்ட விரோத கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் என்று தெரிய வருகிறது.
வெள்ளிக்கிழமை மாலை இரு தரப்பினருக்குமிடையில் ஏற்பட்ட பிரச்சினையை அடுத்து இக்கொலை சம்பவம் இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் கொலை செய்யப்படவரின் வீட்டுக்கு முன்பாகவே இடம்பெற்றுள்ளது.
;இது தொடர்பாக நீர்கொழும்பு பொலிஸார் சந்தேகத்தின் பேரில் இருவரை கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்டுள்ளவர்கள் தாயும் மகனுமாவர்.
இதேவேளை, சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு சென்று நீர்கொழும்பு மேலதிக மஜிஸ்ரேட் டப்ளியூ.ஜே.துலானி எஸ் வீரதுங்க இன்று சனிக்கிழமை விசாரணை நடத்தியதுடன் பிரேத பரிசோதனை செய்து அறிக்கை சமர்பிக்குமாறு உத்தரவிட்டார்.
இக்கொலை சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
செய்தியாளர் - எம்.இஸட்.ஷாஜஹான்
0 comments :
Post a Comment