நாளை முதல் மீண்டும் பிளாஸ்டிக் கூடைகள்
மரக்கறி மற்றும் பழ வகைகளைக் கொண்டு செல்வதற்கு பிளாஸ்டிக் கூடைகளைப் பயன்படுத்த வேண்டும் என்ற சட்டம் நளை முதல் மீண்டும் நடைமுறைக்கு வருவதாக கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
பிளாஸ்டிக் கூடை பாவனை நாளை முதல் அமுலுக்கு கொண்டு வரப்பட்டாலும், சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று கூட்டுறவு மற்றும் உள்நாட்டு விவகார அமைச்சின் செயலாளர் சுனில் எஸ் சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வருடம் டிசம்பர் 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் பிளாஸ்டிக் கூடை பாவனை கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டது.
எனினும் இதற்கு பல்வேறு தரப்பினிடமிருந்தும் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டன. இதனை தொடர்ந்து ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில், அது பிற்போடப்பட்டது.
இந்த நிலையில் இந்த சட்டம் நாளை முதல் மீண்டும் நடைமுறைக்கு வருகிறது.
இதேவேளை, பிளாஸ்டிக் கூடைகளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதால், கொழும்புக்கு வரும் மரக்கறிப் பொதிகளின் எண்ணிக்கை குறையுமானால் மரக்கறி விலைகள் அதிகரிக்குமென மனிங் மார்க்கட் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
0 comments :
Post a Comment