Sunday, January 15, 2012

நீர்கொழும்பு கடற்கரை பூங்காவில் நடைபெற்ற தேசிய மட்ட நீச்சல் போட்டி

தேசிய மட்ட கடல் நீச்சல் போட்டிகள் இன்று முற்பகல் 8..30 மணி முதல் நீர்கொழும்பு – ஏத்துக்கால கடற்கரை பூங்காவில் நடைபெற்றன. கடல் நீர் நீச்சல் போட்டிகளுக்கு ஆர்வமுள்ள விளையாட்டு வீர வீராங்கனைகளின் திறமையை மேம்படுத்துதல் மற்றும் உற்சாகப்படுத்தல் ஆகிய குறிக்கோளின் அடிப்படையில் மேல்மாகாண வீதி அபிவிருத்தி வீடமைப்பு மற்றும் நிர்மாணம் , மீன்பிடி மற்றும் சுகாதார துறை அமைச்சர் நிமல்லான்சாவின் கருத்திட்டத்தின் கீழ் இந்த கடல் நீர் நீச்சல் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டன.

இலங்கை நீர் விளையாட்டு சங்கத்தின் அனுமதியுடன் டைகர் சார்க் நீச்சல் கழகத்தின் (tiger shark swimming club) மேற்பார்வையின் கீழ் இந்த போட்டி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் உட்பட 26 விளையாட்டு கழகங்களை சேர்;ந்த 463 பேர் இ;ந்த போட்டிகளில் பங்கு பற்றினர் . இலங்கை விமானப்படை , கடற்படை , இராணுவ பொலிஸ், சிவில் பாதுகாப்பு திணைக்களம் . அகில இலங்கை விளையாட்டு கழகம் உட்பட நீர்கொழும்பு நகரில் உள்ள பிரபல பாடசாலைகள் சிலவும் , வெளியிடங்களில் இருந்து வந்த நீச்சல் கழகங்கள் சிலவும் இந்த கடல் நீர் நீச்சல் போட்டிகளில் பங்கு பற்றின.

நிமல்லான்சா அமைப்புடன் இணைந்து, பல்வேறு தனியார் நிறுவனங்கள் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில், நீர்கொழும்பு மேயர் அன்ரனி ஜயவீர ,நீர்கொழும்பு மாநகர சபை உறுப்பினரும் கம்பஹா மாவட்ட மெய்வல்லுனர் சங்கத்தின் தலைவருமான தயான் லான்ஸா , தேசிய நீர் விழையாட்டு சங்கத்தின் தலைவர் ஆர்.நாணயக்கார உட்பட் பலர் கலந்து கொண்டனர் .

நிகழ்வின் இறுதியில் போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன.

செய்தியாளர் - எம்.இஸட்.ஷாஜஹான்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com