நுவரெலியாவில் இன்று 2.7 பாகை செல்சியஸ் குறைந்த வெப்பநிலை
நாட்டினை ஊடறுத்து வீசும் உஷ்ணமான காற்றினால் பல பகுதிகளிலும் குளிருடன் கூடிய காலநிலையை எதிர்பார்க்க முடியுமென வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நுவரெலியாவில் இன்று திங்கட்கிழமை அதிகாலையில் மிகவும் குறைந்த வெப்பநிலையான 2.7 பாகை செல்சியஸ் பதிவாகியுள்ளதுடன், நிலத்தில் பனிக்கட்டியும் காணப்பட்டது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த குளிர் வானிலை இன்னும் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு தொடரும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் எம்.டி.தயானந்த கூறினார்.
மத்திய மாகாணத்தில் இவ்வாறான அதீத குளிர் வானிலை நுவரெலியாவில் மட்டும்தான் காணப்படுகின்றது. நுவரெலியா மாவட்டத்தில் 1914ஆம் ஆண்டு ஜுலை மாதம் 30ஆம் திகதி பதிவாகிய -3.7 பாகை செல்சியஸ்தான் இதுவரை காலத்திலும் பதிவாகிய ஆகக்குறைந்த வெப்பநிலையாக உள்ளது எனவும் அவர் கூறினார்.
மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பணியுடனான காலநிலை நிலவுவதாக மாவட்ட செயலாளர் கூறியுள்ளார். குளிருடன் கூடிய காலநிலையால் பயிர்ச் செய்கைகளும் பாதிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 comments :
Post a Comment