உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் தவறில்லை - விசாரணை குழு
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் மாவட்ட ரீதியான முடிவுகள் தொடர்பில் ஏற்பட்ட பிரச்சனைகள் பற்றி ஆராய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு அதன் அறிக்கையை அலரி மாளிகையில் வைத்து ஜனாதிபதியிடம் கையளித்தது.
இக்குழுவின் தலைவியும் தொழில் நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சின செயலாளருமான தாரா விஜேதிலக்க இந்த அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்தார்.
மாவட்ட தரநிலைகளை சரிப்பார்க்கும் போது பிழைகள் ஏற்படவில்லை என்றும், இறுதியில் பரீட்சை பெறுபேறுகளை சீட்டுக்களுக்கு இறுதி செய்யும் போதே தவறு நிகழ்ந்துள்ளதாகவும் ,இந்த தவறு பரீட்சை திணைக்களத்தினாலேயே சிறிது காலத்தில் தீர்க்கப்பட்டதாகவும் அந்த விசாரணை குழு அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், இவ்வாறன தவறுகள் இனிவரும் காலங்களில் இடம்பெறாது தடுப்பதற்கு உடனடியாக அமுலாகும் வகையில் திணைக்களத்திற்கு தொழிநுட்ப ஆலோசகர் ஒருவரை நியமனம் செய்ய வேண்டும் என்றும் இந்த விசாரணைகுழு பரிந்துரை செய்துள்ளது.
உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாகவும் மாவட்ட தரப்படுத்தல் தொடர்பாகவும் எழுந்த பிரச்சினைகள் காரணமாக ஜனாதிபதியால் கடந்த மாதம் 29ஆம் திகதி இந்த நிபுணர் குழு நியமிக்கப்பட்டது.
ஜனாதிபதியின் செயற்பாட்டுச் சபையின் தலைவர் காமினி செனரத் உட்பட விசாரணைக் குழுவின் ஏனைய உறுப்பினர்களும் இந்த வைபவத்தில் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment