பாது காப்பற்ற ரயில் குறுக்கு பாதையை கடக்க முயன்ற பெண்னொருவர் ரயிலில் மோதி மரணம்
பாது காப்பற்ற ரயில் கடவையை கடக்க முயன்ற பெண்னொருவர் ரயிலில் மோதி பரிதாபகரமாக மரணத்தை தழுவினார்.
இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் நீர்கொழும்பு – கச்சேரி அருகில் உள்ள ரயில் குறுக்கு பாதையில் இடம் பெற்றது.
இச்சம்பவத்தில் மரணத்தை தழுவியவர் சீதுவை - ராஜபக்ஷபுர பிரதேசத்தை சேர்ந்த 54 வயதுடைய பிரேமவதி என்ற பெண்ணாவார்.
இவர் தனியார் வைத்தியசாலையொன்றில் சுத்திகரிப்பு ஊழியராக பணிபுரிபவராவார்.
வேலை முடிந்து வீடு செல்லும் போது ரயில் பாதையின் அருகில் உள்ள கம்பியில் அவரது கால் இடறி கீழே விழுந்துள்ளார்.
இதன் போது, ரயில் வரவே அதில் மோதுண்டு அவர் மரணத்தை தழுவினார் என்று சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment