காணிப் பிரச்சினையா? 1933 என்ற இலக்கத்திற்கு அழையுங்கள்
நாட்டில் காணிகள் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் தனிப்பிரிவொன்று நிறுவப்பட்டுள்ளது.
காணி பிரச்சினைகள் குறித்து முறையிட விசேட தொலைபேசி இலக்கம் ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 24 மணித்தியாலங்களும் இயங்கும் வகையில் 1933 என்ற தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
குற்றச்செயல்களில் ஈடுபடுகின்ற குழுக்கள் சிலரது காணிகளை அச்சுறுத்தி பலவந்தமாக தம்வசப்படுத்திக் கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அது குறித்து கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளுக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் நிறுவப்பட்டுள்ள தனிப்பிரிவால் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படவுள்ளது.
காணி அதிகாரத்தை சூழ்ச்சி செய்து பெற்றுக் கொள்ளுதல், பலாத்காரமாக காணிகளை கையகப்படுத்தல் என்பவை குறித்து பொது மக்கள் முறைப்பாடு செய்ய முடியும்.
காணிகள் தொடர்பிலான பிரச்சினைகள் இருப்பின் குற்றப்புலனாய்வுத் தினைக்களத்தின் 0112 320 141 தொடக்கம் 145 வரையான தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment