புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு இராணுவத்தினர் எச்சரிக்கை!
நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்தும் நோக்கில் செயற்படும் குழுக்களுடன் இணைந்து செயற்பட்டால், மீளவும், முன்னாள் புலிபோராளிகளை கைது செய்ய நேரிடும் என்று புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு இராணுவத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் மீள இணைக்கப்பட்ட முன்னாள் புலிபோராளிகளுக்கு குறிப்பாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, முன்னாள் புலிப் போராளிகள் அரசியலில் ஈடுபடுவதற்கு எவ்வித்த் தடையும் கிடையாது என புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் சந்தன ராஜகுரு தெரிவித்துள்ளார்.
சட்ட ரீதியான முறையில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்துவோருடன் இணைந்து செயற்படும் முன்னாள் புலிபோராளிகள் கைது செய்யப்படுவர் என அவர் எச்சரித்துள்ளார்.
புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் மீள இணைக்கப்பட்டுள்ள முன்னாள் புலிபோராளிகள் குறித்து இராணுவத்தினர் உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பி. கிளர்ச்சியாளர்களுடன் முன்னாள் புலிகள் இணைந்து செயற்படுவதாக அண்மையில் உந்துல் பிரேமரட்ன கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment