அனர்த்த சமிக்கை ஒலிபெருக்கிகள் கையளிக்கப்பட்டது.
குருநாகல் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் சுமார் இருபது இலட்சம் ரூபா பெறுமதியான செலவில் மாவட்டத்திலுள்ள 30 பிரதேச செயலகங்ளுக்கும் அனர்த்தங்கள் நிகழும் போது பாதுகாப்பு ஒலிபெருக்கி எச்சரிக்கை உபகரணங்கள் விநியோகிக்கும் நிகழ்வு குருநாகல் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் குருநாகல் மாவட்ட செயலாளர் திருமதி குசும் ஹெட்டிகே மற்றும் குருநாகல் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி முகாமையாளர் டப்லியூ. என். சிசிர வன்னிநாயக்க ஆகியோர் கலந்து கொண்டு வழங்கி வைத்தனர்.


0 comments :
Post a Comment