மெல்பேர்ன் , ஷோல் நகரங்களுக்கும் சேவையை விஸ்தரிக்கின்றது சிறிலங்கா எயார்லைன்.
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகருக்கும், தென்கொரியாவின் ஷோல் நகருக்கும் இடையே புதிய விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரட்ன தெரிவித்துள்ளார். ஆசியாவில் விமான போக்குவரத்தின் கேந்திர நிலையமாக இலங்கையை உருவாக்கும் ஜனாதிபதியின் திட்டத்திற்கமைய, தற்போதுள்ள ஸ்ரீ லங்கன் விமான சேவைக்குரிய 21 விமானங்கள், 27 விமானங்களாக அதிகரிக்கப்படும். தற்போதுள்ள இரண்டு சி-பிளேன்களுடன் மேலும் மூன்று சி-பிளேன்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்படுமென்றும், அவர் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கன் விமான சேவைக்குரிய ஏ-330 ரக மற்றும் ஏ-340 ரக பழைய விமானங்கள் அனைததும், நவீனமயப்படுத்தப்படும். ஏ-330 ரக, ஏ-340 ரக விமானங்களும், புதிதாக கொள்முதல் செய்யப்படும் தற்போது சேவையில் உள்ள எயார் டெக்ஸி சேவை, தினமும் 14 சேவைகளை நடாத்தி வருகின்றது.
0 comments :
Post a Comment