பொலிஸாருக்கு 'காம லஞ்சம்' தர முயன்ற பெண் மீது வழக்கு தாக்கல்.
சிங்கப்பூரில் தண்டனையிலிருந்து தப்புவதற்காக அந்நாட்டு பொலிஸாருக்கு காம லஞ்சம் தர முயன்ற சீன நாட்டு மங்கை ஒருவர் மீது வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 22ம் தேதி நியூ பிரிட்ஜ் ரோட்டில் சீன நாட்டு மங்கை ஒருவர் பிடிபட்டார். தாக்குதல் புகார் ஒன்றின்பேரில் அவரை போலிசார் சோதனையிட்டனர். தங்குவதற்கான அனுமதி காலம் முடிந்தும் சிங்கப்பூரில் தங்கியிருந்தது தெரியவந்தது.
புக்கிட் மேரா அக்கம்பக்க போலிஸ் நிலையத்தைச் சேர்ந்த டோங் ஈ போர் என்னும் அதிகாரி அந்த மாதை கைது செய்ய முயன்ற வேளையில், அவரிடம் குவோ நெருங்கினாராம்.
தம்மை கைது செய்யாமல் விட்டுவிட்டால் தமது உடல் உள்பட எதையும் தரத் தயாராக இருப்பதாக அந்த அதிகாரியிடம் அவர் கூறினாராம். அவ்வாறு செய்வது ஊழல் குற்றம் என்று அதிகாரி எச்சரித்த பின்னரும் இருமுறை அதே பாணியில் காம லஞ்சத்திற்கு அழைப்பு விடுத்தாராம் குவோ.
பெண்ணின் வலையில் சிக்காத பொலிஸ் அதிகாரி அவர் மீது அனுமதித்த காலத்திற்கு மேல் தங்கியது, லஞ்ச ஊழல் ஆகிய இரு குற்றச்சாட்டுகளின் பேரில் வழக்கினை பதிவு செய்து அந்த மாதுக்கு தண்டனை வாங்கிக்கொடுதுள்ளார்,
இதேநேரம் பெண்கள் கழிவறையில் இருந்த ஆடவர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்றும் சிங்கப்பூரில் இடம்பெற்றுள்ளது. காலாங் எம்ஆர்டியில் உள்ள பெண்கள் கழிவறைக்குள் சென்றார் ஃபிலிப்பினோ பெண் ஒருவர். அங்கிருந்த மூன்று அறைகளில் நடுவிலிருந்த அறைக் கதவு உட்பக்கம் தாழிடப்பட்டிருந்தது.
அதனால் அதைத் தாண்டி மூன்றாவது இருந்த அறைக்குள் அந்தப் பெண் நுழைந்தபோது, அருகிலிருந்த நடு அறையின் தரையில் இரு கைகள் தெரிந்தன.
அந்தக் கைகள் ஆணின் கைகள் போல் தெரிந்தன. அந்தக் கைகளில் இருந்த கடிகாரமும் ஆண் அணிவதாய் இருந்தது. அதிர்ந்துபோன அந்தப் பெண், கழிவறையிலிருந்து வெளியில் ஓடினார். வெளியில் நின்ற தமது தோழிகளுடன் சென்று எம்ஆர்டி ஊழியர்களிடம் இதைத் தெரிவித்தார்.
அவர்கள் விரைந்து செயற்பட்டதை அடுத்து பொலிஸார் குறிப்பிட்ட இளைஞனைக் கைது செய்துள்ளனர்.
0 comments :
Post a Comment