Saturday, January 14, 2012

வடபகுதி மக்களுக்கு அடுத்த மாதம் முதல் சமூர்த்தி கொடுப்பனவுகள்.

395 கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள ஒரு லட்சம் குடும்பங்களுக்கு சமூர்த்தி கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன. தகுதியானவர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள், ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பிரதியமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

யுத்தம் காரணமாக, வடக்கு கிழக்கில் சமூர்த்தி திட்டம், முழுமையாக அமுல்ப்படுத்தப்படவில்லை, இவ்வாண்டு முதல் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களிலும், வவுனியா தெற்கு பிரதேச செயலக பிரிவிலும், இது முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ள அமைச்சர் தற்போது நாடு பூராகவும் சுமார் 15 லட்சம் குடும்பங்களுக்கு, சமூர்த்தி கொடுப்பனவு வழங்கப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

2000 ஆம் ஆண்டு 24 வீதமாக இருந்த வறுமை நிலை, 2011 ஆம் ஆண்டில் 7.5 வீதமாக குறைந்துள்ளது என்றும், பிரதியமைச்சர் தெரிவித்தார். 2016 ஆம் ஆண்டில் வறுமைக்கோட்டின் கீழ் உள்ளோரின் வீதத்தை மூன்றாக குறைப்பதே, தமது இலக்கென்றும், அவர் சுட்டிக்காட்டினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com