Friday, January 13, 2012

நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய இலங்கை மீனவர்கள் மோதல். இந்திய மீனவர்கள் இருவர் சிறைப்பிடிப்பு

நெடுந்தீவுக் கடற்பரப்பில் இன்று அதிகாலை இலங்கையின் நீர்கொழும்பு மீனவர்களுக்கும், இந்திய மீனவர்களுக்கும் இடையில் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் நீர்கொழும்பு சிங்கள மீனவர்களின் றோலர் படகு பலத்த சேதமடைந்ததுடன், இரண்டு இந்திய மீனவர்கள் நீர்கொழும்பு மீனவர்களால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு சிறைபிடிக்கப்பட்ட இந்திய மீனவர்கள் மீது நீர்கொழும்பு மீனவர்கள் கடுமையான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். வயர்கள், கயிறுகள் போன்றவற்றால் தாக்கப்பட்ட தழும்புகள் அவர்கள் உடல்களில் காணப்படுகின்றது.

இதேவேளை இவ்வாறு தாக்குதலுக்குள்ளாக்கப்பட்ட இரு இந்திய மீனவர்களும் கடற்படையினரால் மீட்கப்பட்டுத் தற்போது ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேநேரம் மோதல் சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இந்திய மீனவர்களின் றோலர் படகு மிகுதி இரு மீனவர்களுடன் தப்பி ஓடிவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

1 comments :

Anonymous ,  January 14, 2012 at 7:44 AM  

Good start-our singhala brothers should not allow indians to come into our jaffna area-must fight back.Appe kaddiya soorayo-keep it up.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com