புலம்பெயர் புலிகளின் சவால்களை எதிர்நோக்கத் தயார் – கோதபாய ராஜபக்ச!
புலம்பெயர் புலிகளின் சவால்களை எதிர்நோக்கத் தயார் என்று பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிராக சர்வதேச ரீதியில் தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்த புலம்பெயர் புலிகளின் முயற்சிப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கை தேசியப் பாதுகாப்பின் எதிர்கால சவால்கள்' என்ற தொனிப்பொருளில், கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பாதுகாப்புச் செயலாளர் விசேட உரையாற்றிய போதே இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.
அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலாக திகழ்ந்த ஒஸாமா பின்லேடனை கொலை செய்ய வேண்டுமென அந்த நாடு கருதியது. அதேபோன்று இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக திகழ்ந்த பிரபாகரன் உள்ளிட்ட புலி உறுப்பினர்களை முறியடித்தமை தவறாகாது என அவர் தெரிவித்தார்.
ஆசிய பிராந்திய வலயத்தின் சிறிய நாடு என்ற காரணத்தினால் இவ்வாறு இலங்கை மீதுகுற்றம் சுமத்தப்படுகின்றது.
நாட்டின் ஸ்திரத்தன்மையை சீர்குலைப்பதற்கு பல்வேறு சக்திகள் முயற்சித்து வருகின்றன. தற்போது பல்கலைக்கழக மாணவர்களையும் இந்த முயற்சியில் இணைத்துக் கொண்டுள்ளார்கள்.
போராட்டங்கள் என்ற போர்வையில் நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்த இடமளிக்க முடியாது.
மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து அவற்றுக்கு தீர்வு வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.
அரசாங்கத்தை மாற்றுவதற்கு தேர்தல்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர, போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்களின் மூலம் அரசாங்கத்தை மாற்றியமைக்க முடியாது என கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
1 comments :
மக்களுக்கு புலிகளினால் என்றாவது ஒரு நாள் விடிவு காலம் ஒன்று பிறக்கும் என்ற உறுதியான நம்பிக்கையுடனேயே புலம்பெயர்மக்கள் புலிகளுக்காக செயற்பட்டுவந்தனர்.
இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்து வெளிநாடுகளுக்கு சிலர் தனியாகவும், பலர் குடும்பமாகவும் சென்றனர். இவர்களில் சிலர் நேரடியாகவும் மற்றும் சிலர் மறைமுகமாகவும் புலிகளின் வளர்ச்சிக்கு உதவினர். பிரச்சாரம், நிதிதிரட்டல் என பல விதமான பங்களிப்பை வழங்கிவந்தனர். இது தவிர தாம் கஷ்டப்பட்டு உழைத்த பணத்திலும் ஒரு பங்கை ஒதுக்கினர்.
இயக்கத்தை வளர்க்கும் உள்நோக்குடன் அங்கு வசிக்கும் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு என பல பாடசாலைகளை புலம் பெயர் நாடுகளில் அமைத்துக் கொன்டனர். இதற்கு புலி உறுப்பினர்களை பொறுப்பாளர்களாகவும் நியமித்து இரண்டு குறிக்கோள்களையும் நிறைவேற்றியும் வந்தனர். இது மட்டுமல்லாது பல நாடுகளில் முதலீடுகளையும் செய்தும் வந்தனர்.
இப் பாடசாலைகளில் அறவிடப்படும் கட்டணம் ஏனைய பாடசாலைளைகளை விட அதிகமாகவே இருந்தாலும் அது தொடர்பாக அம் மக்கள் கவலையடையவில்லை. ஏனெனில் அப் பணம் புலிகளின் வளர்ச்சிக்காக பயன்படுத்தப்படுகின்றமை என்பதற்காகவும், அதன் மூலம் இலங்கையில் வாழும் தமது உறவுகள் நன்மையடைவர் என்பதனாலும் அது தொடர்பாக அம் மக்கள் கவனம் கொள்ளவில்லை.
புலிகளுக்கும் இலங்கை இராணுவத்துக்குமிடையிலான யுத்தம் 2009ஆம் ஆண்டு முடிக்குகொண்டுவரப்பட்டது, இன்று மூன்று ஆண்டுகளை எட்டப் போகின்றன. இந் நிலையில் புலிகளின் செயல்பாடுகள் அனைத்தும் இலங்கையில் முற்று முழுதாக இல்லை.ஆனாலும் இலங்கையில் புலிகளின் செயல்பாடுகள் தொடர்வதாக புலம் பெயர் மக்களை ஏமாற்றி பணம் வசூலிக்கும் திட்டத்தை கைவிடாது தொடர்ந்து கொன்டு செல்வது எமக்கு கன்கூடாகத் தெரிகிறது.
புலம்பெயர் தேசத்தில் செயற்படும் புலிகளின் செயற்பாட்டாளர்களால் கடந்தகாலங்களில் திரட்டப்பட்ட நிதியை அவர்களின் சொந்தத் தேவைகளுக்கும் அவர்களின் பெயரில் வியாபாரம், பலமாடிக் கட்டிடங்கள் என அமைத்துக் கொன்டு உல்லாசமாக வசித்து வருகின்றனர்.
இதற்க்கு உதாரணமாக அண்மையில் ஜேர்மனில் இடம்பெற்ற சம்பவத்தை எடுத்துக் கொள்ள முடியும்.
ஜேர்மன் காசல் நகரில் தமிழ் பாடசாலைகளை நடத்திவந்த மூன்று செயற்பாடாளர்கள் தொடர்பாக மக்களின் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டது. இம் மூவரும் தமது மோசடிகளை மறைத்து பொய்கணக்குகளை தயாரிக்க முயன்றுள்ளனர். இது தொடர்பாக அம் மூவருள், ஒருவரது மனைவிக்கு தெரியவந்துள்ளது, , அவள் அதை தடுக்க முயன்றுள்ளாள். அதையடுத்து தனது பணமோசடி வெளியுலகிற்கு தெரிய வந்துவிடுமோ? என்ற பயத்தில் அவளை அடித்து கொலை செய்ய முற்பட்டுள்ளார். இன்று தீவிர கண்கானிப்பு பிரிவில் உயிருக்கு போராடி வருகின்றாள்.
இவ்வாறு நாளுக்கு நாள் அம்பலமாகிவரும் மோசடிகள் புலம் பெயர்மக்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளதுடன் ஏமாற்றமும் கொன்டுள்ளனர். இது மட்டுமல்லாது புலிகளின் பணத்தையும் சொத்துக்களையும் பகிர்ந்து கொள்ளும் போட்டியில் புலம் பெயர் நாடுகளிலுள்ள பொறுப்பாளர்களுக்கிடையில் மோதல்களும் காட்டிக் கொடுப்பும் இடம் பெற்று வருகின்றன.
புலிகள் அமைப்பை மீண்டும் கட்டியெழுப்புவோம் என்று கூறி புனர்வாழ்வளிக்கப்பட்ட இளைஞர்களை உசுப்பி அவர்களூடாக இலங்கையில் குண்டுத்தாக்குதல்கள் நடத்தி அவர்கள் அதில் இலாபமடைய எதிர்பார்து வருகின்றனர்.
இவ்வாறு புலம்பெயர் தேசத்திலிருந்து பலவகையான தந்திரங்களை வகுத்து மக்களிடத்தில் பணம் வசூலிக்கும் திட்டம்களுடன் அன்றிலிருந்து இன்று வரை புலிகளின் செயல்பாட்டாளர்கள் வெற்றிபெற்று வருகின்றார்கள் அன்றிலிருந்து புலம்பெயர் சமூகம் ஏமாந்து வருகின்றது..
இப்படிப் பணத்துக்காக தனது மனைவியையே கொல்லமுயலும் இவர்களா தமிழ் மக்களின் பாதுகாவலன்? ஏன் தமழ்மக்கள் சிந்திப்பதி்ல்லை
இன்று இலங்கை அரசிடம் சரணடைந்த புலிகள் அவர்களிடமிருந்த சகல ஆயுதங்களையும் அரசிடம் கையளித்து,பழையவைகளை மறந்து சமூகத்துடன் இணைந்துள்ளனர். இவர்கள் இன்று மற்றவர்களைப்போல் திருமணம் முடித்து குடும்பமாக வாழ்கையை தொடர்கின்றனர்.
அதுமட்டுமன்றி அரசாங்கத்தொழிலிலும் சுயதொழில்களிலும் வேலைசெய்து மற்றவர்களைப்போல் தமது அன்றாடவாழ்கையை தொடர்கின்றனர். அரசாங்கம் இவர்களை பொலீஸ் சேவையில் கூட இணைந்துகொள்ளும் சந்தர்பத்தையும் வழங்கியுள்ளது.
இலங்கையில் இராணுவத்தினால் தமிழர்களுக்கு ஆபத்து என புலம்பெயர் தேசத்தில் புலம்பி இலங்கைக்கு இழுக்கை ஏற்படுத்த முயலும், இலங்கை தமிழர்களை விற்றுப்பிளைக்கும் இவர்களா தமிழர்களுக்கு விடிவைப்பெற்றுத் தருவது.
என இங்குள்ள தமிழர்கள் முனுமனுத்து வருகின்றனர்.
Post a Comment