காடையர்களின் எண்ணிக்கை 43000 ஆக உயர்வு! இவர்களில் 976 பேர் பெண்கள்!
நாட்டில் பிரபல்யமான காடையர்களின் எண்ணிக்கை 43000 ஆக உயர்ந்துள்ளதாக பொலிஸ் குற்றத்தடுப்புத் தகவல் பிரிவு தெரிவிக்கின்றது. இந்தத் தொகையில் 976 பேர் பெண்கள் என்ற வியக்கத்தக்க செய்தியும் கிடைக்கப்பெற்றுள்ளது. மேற்படி குற்றவாளிகள் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெறுகின்ற முறைப்பாடுகள் பாரிய குற்றங்களாக காணப்படுவதுடன் , கடும் தண்டனைக்குரியனவாகவும் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குற்றவாளிகளின் அட்டவணைப் பட்டியலில் இருந்து 5000 பேரின் பெயர் கடந்த வருடத்தின் போது அகற்றப்பட்டுள்ளது. மரணித்தவர்கள் , கடந்த 20 வருடங்களாக எவ்வித குற்றமும் புரியாதோர் மற்றும் 70 வயதினை தாண்டியோரது பெயரே இவ்வாறு அட்டவணையிலிருந்து அகற்றப்பட்டுள்ளதாக குற்றத்தடுப்பு திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment