பனடோல் காட்டுக்கு 1 ரூபா அதிகம் விற்றவருக்கு 5000 ரூபாய் தண்டனை விதித்தது யாழ் நீதிமன்று.
யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் உள்ள பாமசியில் ஓரு பனடோல் காட்டிற்கு ஒரு ரூபாய் அதிகமாக விற்பனை செய்தவருக்கு யாழ்.நீதிவான் நீதிமன்றம் 5000 ரூபா தண்டப்பணம் விதித்துள்ளது. ஒரு பனடோல் காட்டின் விலை 27 ரூபாவாகும், குறிப்பிட்ட பாமசியில் 28 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டபோது அங்கு பாய்ந்த பாவனை அதிகார சபையினர், குறிப்பிட்ட பாமசி உரிமையாளருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு இன்று வியாழக்கிழமை யாழ்.நீதிமன்றில் ஏற்றுக் கொள்ளப்பட்டு யாழ்.நீதிவான் மா. கணேசராச முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
குறித்த பாமசிக் கடை உரிமையாளர் குற்றத்தை ஒப்புக் கொண்டதன் பிரகாரம் அவரிடம் தண்டப்பணமாக 5000 ரூபா அறவிடப்பட்டுள்ளது.
யாழ் ஏ9 வீதி மூடியிருந்தபோது கடல்மார்க்மாக பொருட்கள் குடாநாட்டை வந்தடைந்தது. அக்காலகட்டத்தில் பொருட்களின் விலை நிர்ணயிப்பாளர்களாக கப்பல்போக்குவரத்து முகவர்களும், மொத்த வியாபரிகளுமே இருந்தனர். ஆனால் இன்று பாதை திறக்கப்பட்டுள்ளதுடன், கொழும்பிலிருந்து நிர்ணய விலையில் பொருட்கள் வருகின்றபோதும், கடல்மார்கமாக பொருட்கள் வந்தகாலத்திலிருந்த விலையை பேணுவதற்கே வர்த்தகர்கள் முயற்சிக்கின்றனர்.
தற்போது பாவனை அதிகார சபையினர் களமிறங்கியுள்ளது யாழ் மக்களின் விலைச்சுமையை குறைக்குமென நம்பப்படுகின்றது.
0 comments :
Post a Comment