யாழ் பல்கலைக்கழகம் கடந்த 30 வருடங்கள் LTTE பாசறையாக காணப்பட்டது. SB.திசாநாயக்க
2012 ஆம் ஆண்டு யாழ் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள மாணவர்கரளை அறிமுகப்படுத்தும் நிகழ்வு நேற்று புதன்கிழமை யாழ் பல்கலைக்கழக கைலாசபதி மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரத அதிதியாக கலந்து கொண்டு பேசிய உயர் கல்வித் துறை அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க கடந்த 30 வருடங்கள் யாழ் பல்கலைக்கழகம் புலிகளின் பாசறையாக விளங்கியதாகவும் இவற்றை முடிவுக்கு கொண்டு வந்து, ஓர் அமைதி சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில், இவ்வாண்டு 22 ஆயிரத்து 700 மாணவர்கள், இம்முறை பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு பல்கலைக்கழகம் தெரிவானவர்களுள், சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் முதன்மை பெறுவதாகவும், அவர் தெரிவித்தார்.
பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் தலைமையில் இடம்பெற்ற வைபவத்தில், அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில், தனியார் பல்கலைக்கழங்கள், மாணவர்களிடமிருந்து கூடுதலான பணத்தை அறவிடுவதாக, தெரிவித்தார். இதனை தடுத்து, தேசிய பல்கலைக்கழகங்களில் இலவச பயிற்சிகள் வழங்கப்படுகின்ற. இவ்வாண்டு யாழ். பல்கலைக்கழகத்திற்கு 573 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய ஆகிய நாடுகளும் உதவிகளை வழங்கியுள்ளதாக, அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்தார்.
அத்துடன் யாழ் பல்கலைக்கழக விவசாயபீடத்தை கிளிநொச்சிக்கு மாற்றுவதற்கு சகல நடவடிக்கைகளும் பூர்த்தியாகி விட்டன என்று உயர்கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், விவசாய பீடாதிபதி விவசாய பீடத்தை கிளிநொச்சிக்கு மாற்றுவதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட போதும் நிர்வாக நடைமுறைச் சிக்கல் காரணமாக தாமதமாகின்றது எனக்கூறிய அவர் அமைச்சரவை அங்கீகாரத்தை பெற்றுக்கொள்வதற்கான பத்திரங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார் .
பல்கலைக்கழகங்களில் இடம்பெறுகின்ற பகிடிவதையினால் புகுமுக மாணவர்களது ஆளுமை , உணர்வு என்பன மழுங்கடிக்கப்படுகின்றது. பல்கலைக்கழகங்களுக்கு கல்வி கற்பதை விட்டு பகிடிவதை செய்வதற்காக வரும் மாணவர்களுக்கு ஒரு போதும் மன்னிப்புக் கிடையாது. இனிவருங்காலங்களில் பகிடிவதையினை முற்றாக ஒழித்து எதிர்காலத்தில் பகிடிவதை என்ற சொல்லுக்கே இடமளிக்கக் கூடாது. இது மட்டுமல்ல யாழ்.பல்கலைக்கழகத்தினை சர்வதேச பல்கலைக்கழகங்களின் தரத்திற்கு உயர்த்த வேண்டும் என்றார்
வைபவத்தில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் காமினி சமரநாயக்க உட்பட பலர், கலந்து கொண்டார்.
0 comments :
Post a Comment