Monday, January 9, 2012

அவுஸ்திரேலியா செல்லவதற்கு தயாரான 22 பேர் தங்கல்லையில் கைது.

கப்பலில் சட்டவிரோதமாக அவுஸ்ட்ரேலியாவுக்கு செல்வதற்கு ஆயத்தமாக தங்கல்ல, பொரவௌ பிரதேசங்களில் உள்ள வீடுகளில் தங்கியிருந்த 22 நபர்களை இரசியப் பொலிஸார் மற்றும் தங்கல்ல ருஹுனு கடற்படை முகாம் அதிகாரிகள் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர்.

இவர்களில் 17 பேர் யாழ்பாணம், உடப்பு, சிலாபம் மற்றும் நீர் கொழும்பு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த தமிழர்கள் ஆவர் ஏனைய ஐவரும் சிங்களவர்களாகும்.

கொழும்பிலிருந்து தனியார் பஸ்ஸில் ஹுங்கமவுக்கு வருகை தந்த இவர்கள் அங்குள்ள ஹோட்டலில் தங்கியிருந்த பின் பொரவௌ, வீட்டுக்கு வந்துள்ளதாக விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

பொர வௌ ரெகவ கடற்கரையிலிருந்து மீன்பிடி படகில் ஆழ்கடலுக்குச் சென்று அங்கிருந்து கப்பலில் அவுஸ்ட்ரேலியாவுக்குச் செல்வதற்கு அவர்கள் திட்டமிட்டிருந்ததாக விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

இந்தப் போக்குவரத்துக்காக அவர்கள் கொண்டுசெல்ல வைத்திருந்த உணவுப் பண்டங்கள் மற்றும் தண்ணீர் போத்தல் என்பன அவர்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

பயணத்திற்காக முகவருக்கு 5 இலட்சம் ரூபா விகிதம் வழங்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இந்த வியாபாரத்தின் பின்னணியில் பெரிய முகவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் மோதரவை பதிவிடமாகக் கொண்டவர் எனவும் தெரியவந்துள்ளது.

அவர்கள் அவுஸ்ட்ரேலியாவுக்குச் செல்ல திட்டமிட்டிருந்த கப்பலை கடற்படையினர் கண்டு பிடிக்கும் பணியினையும் ஆரம்பித்துள்ளனர். இவர்கள் யாவரும் மேலதிக விசாரணைக்hக ரகசியப் பொலிஸார் மூலம் கொழும்புக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் மேலும் தெரியவந்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com