Tuesday, December 6, 2011

எல்லை தாண்டிய இந்திய குரங்கை கைது செய்த பாகிஸ்தான் ராணுவம்.

பாகிஸ்தான் எல்லையை தாண்டிய இந்திய குரங்கு கைது செய்யப்பட்டு அங்குள்ள மிருகக்காட்சி சாலையில் அடைக்கப்பட்டது. இந்தியா-பாகிஸ்தான் இடையே எல்லையில் பொதுமக்களும், தீவிரவாதிகளும் ஊடுருவி வருகின்றனர். அவர்களை இருநாட்டு ராணுவமும் கைது செய்து வருகிறது. ஆனால் தற்போது ஒரு அதிசயம் நடந்துள்ளது.

அதாவது இந்திய குரங்கு ஒன்று எல்லையை தாண்டி பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பகவல்பூர் வனப்பகுதிக்குள் புகுந்து விட்டது. இதை அப்பகுதி மக்கள் பார்த்து பாகிஸ்தான் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதை தொடர்ந்து அந்த குரங்கு வலைவீசி தேடப்பட்டது. பின்னர் ஒரு வழியாக அதை பிடித்து கைது செய்தனர். தற்போது அது பகவல்பூர் மிருகக்காட்சி சாலையில் அடைக்கப்பட்டுள்ளது.

அந்த குரங்குக்கு “பாபி” என செல்ல பெயர் வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவில் பஞ்சாப் எல்லைக்குள் ஒரு புறா பறந்து வந்தது. அதை துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் உயிருடன் பிடித்து கைது செய்தனர்.

உளவுப்பார்ப்பதற்காக பாகிஸ்தான் அதிகாரிகள் அதை இந்திய எல்லைக்குள் பறக்க விட்டார்களா? என விசாரணை நடத்தப்பட்டது. அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக பாகிஸ்தானுக்குள் நுழைந்த இந்திய குரங்கு அங்கு கைது செய்யப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com