Tuesday, December 6, 2011

இலண்டனில் தமிழர்களிடம் பணம் கேட்டு மிரட்டும் புலிகள் (ஒலிப்பதிவு இணைப்பு)

ஐரோப்பாவில் மாவீரர் தின நிகழ்வுகள் முடிந்த கையுடன் இந்நிகழ்வினை தமக்கான அங்கீகாரமாக எடுத்துக்கொண்டுள்ள புலம்பெயர் புலிகள் தற்போது தமது வசூலிப்பு வேலைகளை ஆரம்பித்துள்ளனர். பெரும் விளம்பரங்கள் மூலம் மக்களை ஏமாற்றி அழைத்துக்கொண்டு, அங்கு பணம் அறவிட்டது மட்டுமல்லாமல், யார் யார் தமது எமாற்றுக்கு எடுபடக்கூடிய இழிச்ச வாயர்கள் என்பதையும் இனம்கண்டுகொண்டுள்ளனர்.

தற்போது அவ்வாறு இனம்காணப்பட்டவர்களின் கதவுகள் பணத்திற்காக தட்டப்படுவதாகவும், தொலைபேசிகள் அலறுவதாகவும் அறியமுடிகின்றது.

மேற்படி செய்தியினை உறுதிப்படுத்தும் மாவீரர் தின நிகழ்வுகளை இரு பிரிவுகளாக பிரிந்து நின்று செயற்படுத்திய ஒரு பிரிவினர் , நாங்கள் மிகவும் கன்னியமானவர்கள், எங்கள் எதிராளிகளே மக்களிடம் மிரட்டிப்பணம் பறிக்கின்றனர் என்பதனை ஒலிப்பதிவு ஆதாரங்களுடன் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

அதாவது விநாயகம் மற்றும் பாண்டியன் தலைமையிலான தலைமைச் செயலகம் என்போரும் அவர்களுடன் இணைந்து செயற்படும் அனோயா, ஸ்கந்தா, சுகந்தா ஆகியோருமே இவ்வாறு மக்களை மிரட்டி பணம்பறிக்க ஆரம்பித்துள்ளதாக நெடியவன் தலைமையிலான அனைத்துலகச் செயலகத்தினர் தெரிவிக்கின்றனர்.

அவர்கள் மின்னஞ்சல் மூலமாக பரப்பிவரும் செய்தியில்


தலைமைச் செயலகம் என்போரால் நடத்தப்பட்ட போட்டி மாவீரர் தினத்துக்கும் மக்கள் வந்ததை தமக்கான அங்கீகாரமாகக் கருதிய இக்கும்பல் இலண்டனில் சில இடங்களில் தமிழ் மக்களை பணம் கேட்டு மிரட்டத் தொடங்கியுள்ளமை ஆதாரத்துடன் வெளிவந்துள்ளது. முன்னர் மாவீரர் தினம் நடத்திய செயற்பாட்டாளர்கள் கணக்கு காட்டுவதில்லை நாம் அரிச்சந்தியனுக்கு பக்கத்து வீடு நாம் சரியாக கணக்கு காட்டுவோம் , மாவீரருக்கு கோயில் கட்டுவோம் என்று விளம்பரம் செய்தார்கள். ஆனால் ய இவர்கள் இதுவரை தமது மாவீரர் தின கணக்கை மக்களுக்கு கட்டவில்லை.

இது இவ்வாறு இருக்க இலண்டன் குரேடன் பகுதியில் வசிக்கும் தமிழர் ஒருவரின் விட்டுக்குச் சென்ற தலமை செயலகக்க் குழுவை சேர்ந்த சிலர் அவரிடம் தமது அமைப்பிற்கு பணம் தருமாறு கேட்டுள்ளனர். அவர் இதற்கு மறுத்தபோது திரும்பிச்சென்ற மேற்படி குழுவினர் பின்னர் இரவு நேரத்தில் அந்த குறிப்பிட்ட தமிழர் வீட்டுக்கு சில தமிழ் அடியாட்களுடன் சென்று அவரை அச்சுறுத்தி பணம் பெற முற்பட்டுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த அந் நபர் உடனே பிருத்தானிய காவல்த்துறைக்கு தொடர்பு கொண்டதும் இந்தக்குழுவினர் தப்பியோடிவிட்டனர்.

முள்ளிவாய்க்காலில் இருந்தே தப்பியோடிய இவர்களிற்கு இது
எம்மாத்திரம்.

எது எப்படியோ எம் அன்பிற்குரிய தமிழ் மக்களே அனைவரும் சற்று அவதானமாக இருங்கள் அல்லது போனால் விரைவில் உங்கள் வீட்டுக்கதவும் உடைக்கப்படலாம் நாம் கூறுவது உண்மையா இல்லையா என்பதை தலைமை செயலக தலைவர்களில் ஒருவரும் அதன் நிதிப்பொறுப்பாளருமாகிய பாண்டியனின் ஒப்புதல் வாக்கு மூலத்தைக் கேட்டபின் விளங்கிக்கொள்ளுங்கள்.... வருமுன் காப்பதுதான் புத்திசாலிக்கு அழகு.

இவ்வாறு அனைத்துலகச் செயலகம் எனப்படுவோராலு அனுப்பிவைக்கப்பட்டுள்ள மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓலிப்பதிவை நீங்களும் கேட்டுப்பாருங்கள்.

1 comments :

ARYA ,  December 6, 2011 at 11:47 PM  

See more about LTTE money collection and Mafia networks , their actives with child soldires , at following Link:

http://www.defence.lk/new.asp?fname=20111205_03

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com