Friday, December 2, 2011

அமெரிக்காவுக்கு அல்கொய்தா எச்சரிக்கை

அல்கொய்தா அமைப்பின் தலைவர் எய்மன் அல்-ஜவாகிரி நேற்று வீடியோ செய்தி ஒன்றைவெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: 70 வயது அமெரிக்கரான வாரென் வென்ஸ்டீன் என்பவரை ஆகஸ்டு 13-ந்தேதி அல்கொய்தா அமைப்பு பாகிஸ்தானில் கடத்தியது. இவரை விடுவிக்க வேண்டுமென்றால் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சோமாலியா, ஏமன் ஆகிய நாடுகளின் மேல் நடத்தப்படும் வான்வழி தாக்குதல்களை நிறுத்தவேண்டும்.

உலக வர்த்தக மையத்தை தகர்த்ததாக 1993 -ல் கைது செய்யப்பட்டவர்களையும் ஒசாமா பின்லேடனின் உறவினர்களையும் விடுவிக்க வேண்டும்.

ஒபாமா எல்லவற்றிலும் பொய்யான வாக்குறுதிகளையே வெளியிடுகிறார். அவரை நம்ப முடியாது என்றும் கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com