Sunday, December 25, 2011

A/L பெறுபேறுகள் இதுவரையும் வெளியிடப்படவில்லை : ஏமாற்றம் தொடர்கிறது

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளின் பெறுபேறுகள் இன்று காலை வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்தபோதும் இதுவரை வெளியிடப்படவில்லை. அதேபோன்று, பரீட்சைப் பெறுபேறுகளை இன்று மாலை 6 மணிக்குப் பின்னர் இணையத்தள முகவரி ஊடாக பார்வையிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அநுர எதிரிசிங்க அறிவித்தபோதும் இது வரை வெளியிடப்படவில்லை.

இதன் காரணமாக மாணவர்களும் பெற்றோர்களும் மற்றும் ஆசிரியர்களும் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இந்த பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தின் ஊடாக வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டிருந்தார்.

இதன் காரணமாக மாணவர்கள் http://www.doenets.lk/exam/ என்ற இணையம் மூலமும் பரீட்சை முடிவுகளைப் பெற முயற்சி செய்து ஏமாற்றடைந்தனர்.

இதேவேளை, கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறு உரிய நேரத்தில் வெளியிடுவதற்கு முடியாது போயுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ் சுமத்தியுள்ளது. இதனால் மாணவர்கள் பெருமளவில் பாதிக்கப்படுவதாக சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்ட பாடசாலைகளுக்கான பெறுபேறுகளை அதிபர்கள் பரீட்சைகள் திணைக்களத்தில் இன்று காலை 10 மணிக்குப் பின்னர் பெற்றுக் கொள்ள முடியும் எனவும், வெளி மாவட்ட பாடசாலைகளுக்கான பெறுபேறுகள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்றும் முன்னர் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com