Wednesday, November 9, 2011

பிள்ளைகளால் கைவிடப்பட்ட தாய் பஸ் தரிப்பு நிலையத்தை வாழ்விடமாக்கி கொண்டார்.

யாழ்பாணத்தில் பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்ட தாயொருவர் யாழ்பாணத்திலுள்ள தனியார் பஸ் தரிப்பு நிலையமொன்றை வாழ்விட மாக்கிக்கொண்டுள்ளார். இவ்வாறு அவ்விடத்தை வாழ் விடமாக்கி கொண்டுள்ள தாய், அருகேயுள்ள தருசு நிலமொன்றில் அடுப்பு மூட்டி கொழுத்தும் வெயிலில் நின்று சமைத்து உண்டு வருகின்றார்.

ஊள்நாட்டிலும் வெளிநாடுகளிலுமுள்ள மக்களை ஆட்களாக்கி விட்டபின்னர் தன்னை இவ்வாறு கைவிட்டு விட்டதாக தெரிவிக்கும் அத்தாய், இத்தனிமை இனிமையாகவுள்ளாகவும் கூறுகின்றார்.

இவர் இரநேரங்களில் ஆங்காங்கே படுத்து உறங்கி வருகின்றார்.

இலங்கையில் இடம்பெறக்கூடிய அனைத்து குற்றச் செயல்களிலும், சமூக விரோத செயல்களிலும் யாழ் மாவட்டம் தற்போது முன்னணியில் நிற்கின்றது.

அதாவது சிறுவர் துஷ்பிரயோகம், இளவயதுக் கருத்தரிப்பு, பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள், சட்டவிரோதமான குழந்தைப் பேறு, குழந்தைகளைப் பெற்று விட்டு வீதியில் வீசுவது என அனைத்துக் கீழ்த்தரமான செயற்பாடுகளும் யாழ்ப்பாணத்தில் அரங்கேறி வருகின்றது.

எப்படியிருக்கிறது யாழ்ப்பாணத்தில் நிலைமை. முதியோர் தினம் என வருடா வருடம் ஒரு தினத்தைக் கொண்டாடி விட்டு, பின் அவர்களை வீதிகளில் தங்க வைக்கிறது யாழ்.சமூகம்.

கண் கண்ட தெய்வம் தாய் என்றார்கள். தற்போது கண்டறியாத தெய்வமாகக் கலங்கி நிற்கிறது தாய்மை.




2 comments :

naleem ,  November 10, 2011 at 8:55 AM  

iwalin pillaigal seidha indha kodumaikku indha ulagaththileye iraiwan awargalukku narahaththai kodukka wendum...

Anonymous ,  November 10, 2011 at 5:01 PM  

Jaffna is no longer a traditional and cultured Jaffna.Civilization and the present generation,it's evil.We think this is going to backfire.

Hope and pray the social workers or the responsible government officers
would take the poor woman to a charity home for which they would get the blessings

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com