Wednesday, November 9, 2011

அமெரிக்க வரலாற்றில் அதிகூடிய அபராதம் (1725 கோடி) செலுத்தும் தனிநபரான இலங்கையர்

அமெரிக்க பங்குச் சந்தையில், "இன்சைடர் டிரேடிங்' மூலம் மோசடி செய்ததாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர் ராஜ் ராஜரத்னம், 9 கோடியே 28 லட்சம் டாலர் அபராதம் கட்ட வேண்டுமென நியூயார்க் மாவட்ட கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவில் தனிநபர் ஒருவருக்கு விதிக்கப்பட்ட மிக அதிகபட்ச அபராதத் தொகை இதுதான்.

"இன்சைடர் டிரேடிங்' என்ற முறை மூலம் அமெரிக்க பங்குச் சந்தையில் பல கோடி மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ராஜரத்னத்திற்கு, கடந்த அக்டோபர் மாதம், 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இவ்வழக்கின் இறுதித் தீர்ப்பை நேற்று, நியூயார்க் மாவட்ட கோர்ட் வெளியிட்டது. அதன்படி, அவர் மீதான சிவில் வழக்கில், அவர், 9 கோடியே 28 லட்சம் டாலர் அபராதம் கட்ட வேண்டும். கிரிமினல் வழக்கில், சட்ட விரோதமாக லாபம் ஈட்டியதற்காக, 5 கோடியே 38 லட்சம் டாலரும், குற்றவியல் அபராதமாக 1 கோடி டாலரும் அபராதமாக அவர் கட்ட வேண்டும். ஆக மொத்தம் அவர், 15 கோடியே 66 லட்சம் டாலர் (17245677363.382) அபராதத் தொகை கட்ட வேண்டும்.

அமெரிக்க பங்குச் சந்தை வரலாற்றில், தனிநபர் ஒருவருக்கு இவ்வளவு அதிகபட்சமாக அபராதம் விதிக்கப்பட்டது இதுவே முதன் முறை.

இவ்வளவு அதிகபட்சமாக அபராதம் விதித்ததற்கு, நீதிபதி ஜெட் ரகோப் காரணம் கூறுகையில், "இன்சைடர் டிரேடிங்கில் ஈடுபட்டால் நாட்டிற்கு பெரும் நிதி இழப்பு ஏற்படும் என்பதால், இதில் இறங்க நினைக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடமாக இருக்கட்டும் என்பதற்காகத் தான் இவ்வளவு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது' என்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com