Friday, November 4, 2011

அங்கத்துவ அறிக்கை சட்டவிரோதமானது - ஜே வி பியின் கிளர்ச்சி குழு

கட்சிக்குள் பிரச்சினைகள் இருக்கும் போது கட்சியின் அங்கத்துவ அறிக்கையை தயாரிப்பதானது சட்டவிரோதமானதாகும் என ஜே வி பியின் கிளர்ச்சி குழு தெரிவித்துள்ளது. கிளர்ச்சி குழு உறுப்பினரான ஜே வி பியின் மத்திய செயற்குழு உறுப்பினர் புபுது ஜெயகொட இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கட்சியில் தேன்றியுள்ள குழப்ப நிலைகளுக்கு மத்தியில் கட்சியின் அங்குத்துவ அறிக்கை தயாரிப்பதானது, ஏற்றுக் கொள்ள முடியாத செயல் எனவும் இந்த மத்திய செயற்குழு கூட்டத்திற்கு, செயற்குழுவின் உறுப்பினர் என்ற வகையில் தமக்கு அழைப்பு எதுவும் விடுக்கப்பட்டிருக்க வில்லை எனவும் புபுது ஜெயகொட குறிப்பிட்டுள்ளார்

ஜே வி பி யின் அங்கத்தவர்களது பெயர் உள்ளடங்கிய புதிய பட்டியல் தேர்தல்கள் ஆணையளாளருக்கு, கட்சியின் பிரதான செயலாளர் டில்வின் சில்வாவினால் அனுப்பட்டுள்ளது.

இந்த புதிய பெயர் பட்டியலுக்கு கட்சியின் மத்திய செயற்குழு தமது ஆதரவினை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கட்சியின் மத்திய செயற்குழு, அரசியல் சபை, மற்றும் கட்சியின் அங்கத்தவர்களது பெயர் உள்ளடங்கியவகையில் இந்த புதிய பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஜே வி பியின் பிரதான செயலாளர் டில்வின் சில்வா பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல்கள் ஆணையாளருக்கு அனுப்பப்பட்டது பெயர் பட்டியலானது கட்சியில் புதிதாக இணைந்து கொண்ட அங்கத்தவர்களது பெயர் மாத்திரமே.முன்னர் அனுப்பப்பட்ட கட்சியின் அங்கத்துவ பட்டியல் இதன்காரணமாக செல்லுப்படியாகாது எனவும் டில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com