Friday, October 14, 2011

சவூதியில் விபத்து - இலங்கையர் இருவர் உயிரிழப்பு

சவுதி அரேபியாவின் மக்கா - ஜெத்தா நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வான் விபத்தில் புனித ஹஜ் கடமைக்காக மக்கா நகருக்குச் சென்ற இலங்கை தம்பதியினர் உயிரிழந்துள்ளனர். குறித்த இலங்கைர்கள் பயணித்த வான் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இவர்கள் கடந்த புதன்கிழமை இரவு உயிரிழந்ததாக ஜெத்தாவில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.

47 வயதுடைய அப்துல் வாகாப் அப்துல் ஜவார்ட் மற்றும் அவருடைய மனைவியான 42 வயதுடைய அப்துல் ஹலீம் சம்சுனிசா ஆகியோரே உயிரிழந்தவர்களாவர்

. . கண்டி கலகெதரவிலிருந்து புனித ஹஜ் கடமைகளுக்கு வந்தவர்களே உயிரிழந்துள்ளதாக ஜெத்தாவிலுள்ள இலங்கை தூதுவர் ஆதம்பாவா உதுமாலேபை தெரிவித்துள்ளார்

. இந்த விபத்தில் போது குறித்த வானில் பயணித்த மேலும் இலங்கை தம்பதியினர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். விபத்தில் காயமடைந்த சிலர் ஜெத்தாவிலுள்ள கிங் அப்துல்லாஸிஸ் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருவதாக இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார். இவர்கள் பயணித்த வானின் ரயர்கள் வெடித்ததால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. அதிவேக வீதியொன்றில் இவர்கள் பயணித்த வேன் விபத்துக்குள்ளானதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபத்தில் உயிரிழந்தவர்களின் ஜனாஸா மக்கா நகரில் நேற்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இம்முறை ஹஜ் கடமைகளை நிறைவேற்றவென 3800 பேர் இலங்கையிலிருந்து மக்கா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com