சரத் என் சில்வாவின் நண்பரான வெள்ளைவேன் கடத்தல்கரார் கைது.
கொழும்பு பிரதேசத்தில் இடம்பெற்ற வெள்ளைவேன் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடையவர் என்ற சந்தேகதில் பாதாள குழுவொன்றின் தலைவரான ரோகண குமார என்பவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பிரபல தமிழ் வர்த்தகரான முருகேசன் குருபரன் என்பவரை கடத்தி கொலை செய்ததான குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது.
பேராதெனிய மல்வத்தை கொலை வழக்கின் பிரதிவாதியான ரோகண குமார நாட்டிலிருந்து தப்பியோட முயற்சி செய்த போது குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையின் பிரபல சீனி வியாபாரியான முருகேசன் குருபரன் என்பவரை கடத்திச் சென்று பிலியந்தலையில் வைத்துப் படுகொலை செய்த பின்னர் அவரது சடலத்தை பிறிதொரு இடத்தில் இவர் புதைத்து வைத்திருந்த நிலையில் அது கண்டு பிடிக்கப்பட்டிருந்தமை தெரிந்ததே.
வெள்ளை வானில் பொலிஸாரின் சீருடைக்கு ஒப்பான உடையில் சென்றே குறிப்பிட்ட தமிழ் வர்த்தகரை இவர் கடத்தியிருந்தார்.
இவர் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என சில்வாவின் நெருங்கிய சகா என சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவிக்கின்றது.
எது எவ்வாறாயினும் மேற்படி கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்றபோது புலிசார்பு இணையத்தளங்கள் படையினர் மீது தொடர்சியான குற்றச்சாட்டினை மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் உண்மையான குற்றவாளிகளை காப்பாற்றி வந்துள்ளது எனலாம்.
0 comments :
Post a Comment