Friday, September 2, 2011

இலங்கை தமிழர் வாழும் பிரதேசம்களில் கண்காணிப்பு

ராஜீவ்காந்தி வழக்கு பாரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கிய காலம் தொடக்கம் கேரளாவில் இலங்கை தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசம்களில் கேரளா பொலிஸாரால் கண்காணிப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பத்தனம்திட்ட மாவட்டத்தில் உள்ள தமிழ் மக்கள் வாழும் அகதி கள் முகாமை கண்காணிக்கவென விசேட பொலிஸ் குழுவொன்றும் நியமிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை ,சாதாரண கண்காணிப்பு நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட்டாலும் அதற்கென விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்ததாக பத்தனம்திட்ட மாவட்ட மாவட்ட பொலிஸ் உயரதிகாரி கே.கே. பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு அகதிகளின் நடவடிக்கைகள் கூர்ந்து கவனிக்கப்பட்டதாகவும், ஆனாலும் எதுவித சந்தேகத்துக்கு இடமான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

1 comments :

Anonymous ,  September 2, 2011 at 5:29 PM  

Poor tamils their story is something like "frying pan to the fire".Srilanka is a peaceful country now and why they are not willling to come back and start a fresh life in their country,rather being in a burning fire.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com