Friday, September 2, 2011

இலங்கையில் தரையிறங்கிய அமெரிக்க சீஐஏ விமானம். ஏ.எவ்.பி

அமெரிக்காவின் சி.ஐ.ஏ. அமைப்பினால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட தனியார் விமானமொன்று இரகசிய பயணமொன்றின்போது பயங்கரவாத சந்தேக நபர்களை கொண்டு செல்வதற்காக 2003 ம் ஆண்டு இலங்கையில் தரையிறங்கியதாக வாஷிங்டனிலிருந்து வெளிவரும் ஏ.எவ்.பி. செய்திஸ்தாபனம் தகவல் தெரிவித்துள்ளது.

சி.ஐ.ஏ.யினால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட விமான சேவை நிறுவனங்கள் இரண்டிற்கிடையிலான வழக்கொன்றின் போதே செப்டெம்பர் 11 தாக்குதலைத் தொடர்ந்து, உலகெங்கும் அமெரிக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பயங்கரவாத சந்தேக நபர்களை கொண்டு செல்வதற்காக வாடகைக்கு அமர்;த்தப்பட்ட தனியார் விமானங்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன.

12.08.2003 ஆம் ஆண்டு வாஷிங்டனுக்கு அருகிலுள்ள டல்லாஸ் சர்வதேச விhமன நிலையத்தலிருந்து இத்தகைய விமானமொன்று 6 பயணிகளை ஏற்றிக்கொண்டு பாங்கொக் நோக்கி புறப்பட்டதாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை தெரிவித்துள்ளதாக ஏ.எவ்.பி. செய்தி வெளியிட்டுள்ளது.

இவ்விமானம் நான்கு நாட்களின் பின் அமெரிக்காவுக்குத் திரும்புவதற்கு முன்னர் ஆப்கானிஸ்தான், இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் தரையிறங்கியதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தோனேஷியாவின் ரிதுவான் இஸாமுதீனின் கைது இடம்பெற்ற வேளையில் இப்பயணம் மேற்கொள்ளப்ட்டுள்ளதாக தென்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com