புலம்பெயர் தமிழர் உங்களுக்கு என்ன செய்கின்றார்கள்? வன்னி மக்களிடம் விமல் கேள்வி
புலம்பெயர் தமிழர்களிடம் நிறையவே பணம் உள்ளது ஆனால், அவர்கள் மீள்குடியேறிய தமிழ் மக்களுக்காக ஒரு சதத்தையேனும் செலவிட முன்வருகிறார்களா? அல்லது உங்களுக்கு நேரடியாக ஏதாவது வழியில் உதவி செய்கின்றார்களா என நேற்று முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேறியோருக்கான வீட்டுத்திட்டமொன்றுக்கு அடிக்கல் நாட்டும் வைபவத்தில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பேசிய வீடமைப்புத்துறை அமைச்சர் விமல் வீரவன்ச கேட்டுள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க வேண்டும் என்பதில் உண்மையான அக்கறையுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயற்படவில்லை எனவும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்ந்து நீடிக்க வேண்டுமென்றே அவர்கள் விரும்புகிறார்கள் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அத்துடன் உங்கள் வாக்குகளை பெற்று பாராளுமன்று வந்து கொழும்பிலே சுகபோகம் அனுபவித்துக்கொண்டிருகின்ற அவர்கள் மீள்குடியேறிய உங்களுக்கு ஆக்கபூர்வமான எவ்விதமான உதவியும் செய்கிறார்கள் இல்லை எனவும் மாறாக நிலைமைகளை மேலும் சிக்கலாக்கவே முயற்சிக்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment