பொலிஸாருக்கு எதிராக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ய வழி.
முறைப்பாடு செய்வதற்காக பொலிஸ் நிலையத்திற்கு வரும் நபர்களுக்கு வழங்கப்படும் சீட்டுப்பத்திரத்தில் உயர் பொலிஸ் அதிகாரிகளுடைய தொலைபேசி இலக்கங்களை குறிப்பதற்கு பொலிஸ் தலைமையகம் முடிவு செய்துள்ளது. அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் இது கட்டாயப்படுத்தப் பட்டுள்ளதாகவும் மாகாணங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர், மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர். கோட்டத்திற்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரி, மற்றும் உதவி பொலிஸ் அதிகாரி ஆகியோருடைய தொலைபேசி இலக்கங்கள் இவ்வாறு பற்றுச் சீட்டில் குறிக்கப்படவுள்ளன.
முறைப்பாடு தொடர்பாக எந்தவித விசாரணைகளும் செய்யப்படாவிட்டால் அல்லது பொலிஸார் அநீதியாக நடந்து கொண்டால் அது தொடர்பாக உயர் பொலிஸ் அதிகாரிகளிடம் அறிவித்து நீதியைப் பெற்றுக் கொள்ளலாம் என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
0 comments :
Post a Comment