தனது ஆசைக்கு இணங்க மறுத்த பெண்;ணை தாக்கிய நபருக்கு பிணை
வீட்டில் தனியாக இருந்த திருமணமான பெண்ணை வல்லுறவு புரிய முயன்ற போது எதிர்ப்பு தெரிவித்தமைக்காக அந்த பெண்ணின் முகத்திலும் தலையிலும் தாக்கிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீர்கொழும்பு மேலதிக நீதவான் 10 அயிரம் ரூபா ரொக்கப்பிணையிலும் 50 ஆயிரம் ரூபா சரீர பிணையிலும் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
நீர்கொழும்பு, கிம்புலாப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரே விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டவராவார். கிம்புலாப்பிட்டிய பரதேசத்தை சேர்ந்த ஓரு பிள்ளையின் தாயர் ஒருவரே இந்த வழக்கின் முறைப்பாட்டாளராவார்.
2011 செப்டெம்பர் 10 ஆம் திகதி முறைப்பாட்டாளரான பெண் வீட்டில் தனியாக இருந்தபோது சந்தேக நபர் அவரை வல்லுறவு புரிய முயன்றதாகவும் அந்தப்பெண் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தமையினால் அடுத்த நாள் அந்தப்பெண் வீதியில் சென்று கொண்டீருக்கும் போது சந்தேக நபர் அவரை தாக்கியுள்ளதாகவும், நீர்கொழும்பு பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவினர் தாக்கல் செய்துள்ள முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம் 80 வயது வயோதிபப்பெண்ணின் 88ஆயிரம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியை கொள்ளையிட்ட நபரை நீர்கொழும்பு மேலதிக நீதவான் எதிர்வரும் 29 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். ஹசனுப்பிட்டிய பிரதேசத்திலேயே இக்கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது
ஹசனுப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த பெரியநாயகி கதிர்தம்பி என்ற பெண்ணே இவ்வழக்கின் முறைப்பாட்டாளராவார். சம்பவம் இட்ம்பெற்ற தினத்தன்று சந்தேக நபர் மீன்வியாபாரம் செய்வதற்கு முறைப்பாட்டாளரின் வீட்டுக்கு சென்றுள்ளார். இதன்போது முறைப்பாட்டாளர் சந்தேக நபரிடம் மீன்வாங்க 100 ரூபா பணம் கொடுத்துள்ளார். பின்னர் அவர் சமையலறை பக்கம் சென்ற போது, வீட்டின் முன்வாசலில் இருந்த அவரது சகோதரியான 80 வயதுடைய வயோதிபப் பெண்ணின் கழுத்திலிருந்த தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு சந்தேக நபர் தப்பியோடியுள்ளார்.
இதன்போது அவர் கூச்சலிடவே பிரதேச மக்கள் துரத்திச்சென்று சந்தேக நபரை கைது செய்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சந்தேக நபரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் அன்றைய தினம் அவரை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் மேலதிக நீதவான் உத்தரவிட்டார்
0 comments :
Post a Comment