காத்தான்குடிக் குப்பை விவகாரம் முடிவுக்கு வருமா? யுஎன்டிபி ஆறு கோடி நிதி ஒதுக்கீடு.
காத்தான்குடி பிரதேச சபைக்குட்பட்ட குப்பைகள் தொடர்பாக கடந்த காலங்களில் நிலவிவந்த சர்சைக்கு முடிவு வரக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டமான யு.என்.டி.பி. மற்றும் கொக்கா கோலா நிறுவனத்தின் நிதியுதவியுடன் காத்தான்குடி நகர சபை பிரிவிற்குட்பட்ட காத்தான்குடி இரண்டாம் குறிச்சி ஆற்றங்கரை பகுதியில் கழிவு நீர் அகற்றல் மற்றும் கழிவு நீர் முகாமைத்துவத் திட்டம் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இவ் வைபவத்தில் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் டக்ளஸ் கே., கொக்கா கோலா நிறுவனத்தின் இலங்கை முகாமையாளர் அவிசேக் ஜுக்றான், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான யு.எல்.எம்.என்.முபீன், கே.எல்.எம்.பரீட், காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.எம்.அஷ்பர், உட்பட நகர சபை உறுப்பினர்கள் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் அதிகாரிகள் கொக்க கோலா நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் பிரமுகர்கள் முக்கியஸ்த்தர்கள் கலந்துகொண்டனர்.
இதன் போது இத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்ததுடன் இதன் நினைவுக்கல்லையும் அதிதிகள் திரை நீக்கம் செய்துவைத்தனர்.
இத்திட்டத்தின் மூலம் இங்குள்ள வீடுகளிலுள்ள மல சல கூடங்களிலிருந்து கழிவு நீர் அகற்றப்பட்டு கழிவு நீர் முகாமைத்துவம் மேற்கொள்ளப்படுவதுடன் இதன் மூலம் சுகாதார திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்.ஜீனைட்.எம்.பஹத்
1 comments :
இவக எல்லாரும் இப்ப கோட்டும் சூட்டும்போட்டுட்டு ஒண்டா நிண்டு காசை மட்டும் வாங்குவாங்க பொறகு ஏதம் பெரசிசினையெண்டா கண்ணால காணையும் கிடைக்காது. அதுலையும் நம்பட ஹிஸ்புல்லா நானா இந்த காசில எவ்வளவ யார்ர பேர்ல போடப்போறாரெண்டு அல்லாகுத்தாலாவுக்குத்தான் தெரியும் வாப்போ.
Post a Comment