பொலிசாரை படுகொலை செய்த நபருக்கு அமெரிக்காவில் மரணதண்டனை நிறைவேற்றம்
அமெரிக்க ஜோர்ஜிய மாநிலத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஓருவரை படுகொலை செய்த குற்றச்சாட்டில் ரோய் டேவிஸ் என்ற 42 வயது நபருக்கு புதன்கிழமை இரவு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. 1989 ஆம் ஆண்டு பொலிஸ் உத்தியோகத்தரான மார்க் மக்பாயில் என்பவரை சுட்டுக்கொன்றமைக்காகவே அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டதற்கு இணங்க இரவு 7.00 மணிக்கு அவரது மரண தண்டனையை நிறைவேற்ற ஜோர்ஜிய அதிகாரிகள் தயாரான வேளை , இறுதி நேரத்தில் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்ட கருணை மனுவால் அவரது மரண தண்டனை 3 மணிநேரம் காலதாமதமாகியது. இதனையடுத்து ரோய் டேவிசுக்கு விச ஊசி ஏற்றி
மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது விஷ ஊசி ஏற்றி 15 நிமிடங்கள் கழித்து ரோய் டேவிஸ் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
0 comments :
Post a Comment