Saturday, September 3, 2011

கட்டுநாயக்க ஆர்ப்பாட்டத்தில் உயிரிழந்த ஊழியருக்கு அஞ்சலி.

அரசாங்கத்தின் உத்தேச ஓய்வூதிய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது சுட்டுக் கொலை செய்யப்பட்ட தொழிற்சாலை ஊழியரான ரொசேன் சானக்கவின் (22 வயது) மூன்று மாத நினைவாஞ்சலி மற்றும் சம்பவத்தில் காயமடைந்த ஊழியர்களை நினைவுபடுத்தும் நிகழ்வும் நேற்று வியாழக்கிழமை மாலை கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய சந்தியருகில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் ரொசேன் சானக்கவின் தாய்,தந்தை, சகோதரர்கள், சகோதரி, சம்பவத்தில் காயமடைந்த ஊழியர்கள், மற்றும் சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள், தொழிற்சங்க, அரசசார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்தோர் என ஆயிரம் பேர்வரை கலந்து கொண்டனர்.

நிகழ்வில் ரொசேன் சானக்கவின் படத்திற்கு புஷ்பாஞ்சலி செலுத்தப்பட்டதுடன் பிரபல சிங்களப் பாடகர் ஜயதிலக்க பண்டார , அருட்தந்தை அன்ரன் ஜயானந்த ஆகியோரின் பாடல்களும் இடம்பெற்றன.ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டோர் பேரணியாகவும் சென்று தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.


படம்-1 ரொசேன் சானக்கவின் தாயார் மலராஞ்சலி செலுத்தும் காட்சி
படம்-2 ரொசேன் சானக்கவின் தாயார் நிகழ்வில் உரையாற்றும்; காட்சி
படம்-3 பாடகர் ஜயதிலக்க பண்டார பாடும் காட்சி
படம்-4 பேரணியாக செல்லும் காட்சி







0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com