மக்கள் விடுதலை முன்னணயின் பின்னால் புலனாய்வுத் துறையினர்
மக்கள் விடுதலை முன்னணி கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உட்பூசலை அடுத்து இதுவரை காலமும் வெளிவராதிருந்த அந்தக் அக்கட்சியின் உள்ளரங்க விடயங்கள் பலவற்றை அறிந்து கொள்வதற்காக அரச புலனாய்வுத் துறையினர் தமது புலனாய்வை ஆரம்பித்துள்ளதாக தெரிய வருகிறது.
இதுவரையில் கிளர்ச்சிக்கு வராத மக்கள் விடுதலை முன்னணியின் சில தலைவர்கள் பெலவத்தையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்திற்கு வந்து செல்வதாகவும் அந்த தலைவர்களையும் மற்றும் செயற்பாட்டாளர்களையும் இனங்காண்பதற்கு புலனாய்வுத் துறையினரை களமிறங்கியுள்ளதாக அறிய முடிகின்றது.
ஜேவிபி எனப்படுகின்ற கட்சியினுள் ஏற்பட்டுள்ள பிளவு எதிர்வரும் நாட்களில் நாட்டுல் கிளர்சி ஒன்றுக்கு வழிவகுக்குமா என்றகோணத்தில் மக்களின் சிந்தனை சென்றுள்ளது. இவ்வாறன சந்தர்பங்களில் இவற்றை முன்னெடுக்ககூடியோர் தொடர்பான விபரங்களை முன்கூட்டியே அறிந்துகொள்ளும் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
0 comments :
Post a Comment