கேள்விக்குறியாகும் யாழ் எம்பிக்களின் எண்ணிக்கை. குடிசன மதிப்பீடு ஒக்டோபரில் ஆரம்பம்.
தேசிய குடித்தொகை மதிப்பீடுகள் எதிர்வுரும் ஓக்டோபர் ஆரம்பமாகும் என்று புள்ளிவிபரத் திணைக்கள பணிப்பாளர் சுரன்ஜீனா வித்தியாரத்ன தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக மேலும் குறிப்பிட்டுள்ளதாவது 1981 ஆம் ஆண்டின் பின்னர் நாடு முழுவதுமாக குடிசன மதிப்பீட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த மதிப்பீட்டின் போது வீடுகள், தொழிற்சாலைகள், மக்கள் தொகை, மதவழிபாட்டுத்தலங்கள் தனியார் அலுவலகங்கள், மக்கள் பொதுவசதிகள், குடும்ப வருமானம், வாழ்வாதாரம் தொழில்வாய்ப்பு போன்றவை தொடர்பாக தகவல்கள் திரட்டப்படவுள்ளன.
கிட்டத்தட்ட 25 விடயங்கள் தொடர்பான மதிப்பீடுகள் மதிப்பீட்டு பணியாளர்களினால் மதிப்பிடப்பட்டு தரவுகள் எடுகப்படும். மதிப்பீடு தொடர்பான இறுதி அறிக்கை 2012ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் வெளியிடப்படும் இதற்காக 500 உத்தியோகஸ்தர்களும் 75 ஆயிரம் கணக்கெடுப்பு பணியாளர்களும் பயிற்றுவிக்கப்படவுள்ளனர் என்றும் புள்ளிவிபரத்திணைக்கள பணியாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார் மூன்று
தசாப்தத்தின் பின்னர் நாடு தழுவிய ரீதயில் குடித்தொகை மதிப்பீடுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் இக்குடிசன மதிப்பீட்டின் பெறுபேறுகளின் பிரகாரமே எதிர்வரும் தேர்தலில் மாவட்டங்களுக்கான பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒதுக்கீடு செய்யபட்படும். இன்று யாழ் சனத்தொகையை பொறுத்தவரை அது கணிப்பீட்டின் பின்னர் சரி அரைவாசியாக குறையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அவ்வாறாயின் யாழ் மாவட்த்திற்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும் சரி அரைவாசியாக குறையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment