எஸ். பி. திசாநாயக்கவுக்கு எதிராக போஸ்ரர்
உயர் கல்வி அமைச்சர் எஸ். பி. திசாநாயக்கவின் செயற்பாடுகள் காரணமாக இலவசக் கல்வியானது பாதாளத்திற்கு இட்டுச் செல்லப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மாணவர்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். தனியார் பல்கலைக்கழகங்களுக்கு இலங்கையில் அனுமதி வழங்க எடுத்துள்ள முயற்சி, பல்கலைக் கழகங்களுக்கு புதிதாக தெரிவு செய்யப்படும் மாணவர்களுக்கு படை முகாம்களில் வழங்கப்படும் பயிற்சி நெறி உட்பட பல்வேறு விடயங்கள் காரணமாக உயர் கல்வி அமைச்சருக்கும் மாணவர்களுக்குமிடையில் முரண்பாடுகள் அதிகரித்துள்ளன.
இதன் காரணமாக மாணவர்கள் தமது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் சுவரொட்டிகளை ஒட்டத் துவங்கியுள்ளனர். பொறியியல் பீட மாணவர் சங்கத்தினால் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளையே படத்தில் காண்கிறீர்கள்.
0 comments :
Post a Comment