Sunday, September 11, 2011

அமெரிக்காவில் செம்டெம்பர் 11 தாக்குதல் இன்றுடன் 10 வருடங்கள் பூர்த்தி.

அமெரிக்காவில் செம்டெம்பர் 11 பயங்கரவாத தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு இன்றுடன் 10 வருடங்கள் பூர்த்தியாகின்றதது. அல்கைய்தா இயக்கம் பயணிகள் விமானங்களைப் பயன் படுத்தி கடந்த 2001ம் மேற்கொண்ட இந்த தாக்குதல்களில் சுமார் மூவாயிரத்திற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டிருந்தனர்

அல் கைய்தா இயக்கத்தினால் குறிப்பிடத்தக்க, உறுதிப்படுத்தப்படாத அச்சுறுத்தல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து நியூயோர்க் மற்றும் வொஷிங்டனில் பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டுள்ளதாகவும் இந்த நிலையில் இன்றைய தினம் கூடுதல் விழிப்புடன் இருக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா தனது பாதுகாப்பு அணியை வலியுறுத்தியுள்ளார்.

தேசிய பாதுகாப்பு மற்றும் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது, பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளை அமெரிக்கா பின்நிற்காது மேற்கொள்ள வேண்டுமென ஒபாமா கூறியுள்ளதாக வெள்ளை மாளிகையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாக்குதலில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூரும் விதமாக ஆயிரக்கணக்கான மக்கள் நியூயோர்க் நகரில் இன்றைய தினம் ஒன்றிணையவுள்ளதாகவும் தாக்குதல்கள் நடத்தப்பட்ட நியூயோர்க், வொஷிங்டன் மற்றும் பென்சில்வேனியா ஆகிய பகுதிகளுக்கு பரக் ஒபாமா இன்றைய தினம் விஜயம் மேற்கொளள்ளவுள்ளார். எனவும் தெரிவிக்கப்படுகின்றது.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com