தான்சானிய படகு விபத்தில் 192 பேரின் சடலங்கள் மீட்பு
சான்சிபாரிலிருந்து பெம்பா தீவுக்கு சென்ற தான்சானிய படகு நேற்று திடீரென விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த சுமார் 200க்கு மேற்பட்டவர்கள் நீரில் மூழ்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இதுவரை 192 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள் ஆவர். இப்படகில் 800 க்கு மேற்பட்டோர் பயணித்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment