Wednesday, August 10, 2011

குறைந்த தண்டனை விதிக்கக் கோருகிறார் ராஜ் ராஜரட்ணம்

அமெரிக்க பொருளாதாரத்தை ஆட்டம்காணவைத்த இலங்கைத் தமிழரான ராஜ் ராஜரட்ணம் நிறுவனங்களின் உட்தகவல்களைப் பெற்று பங்குச்சந்தை வர்த்தகத்தில் சட்டவிரோதமான முறையில் 63.8 மில்லியன் டொலர் லாபமீட்டியமை தொடர்பான வழக்கில் குற்றவாளியாக காணப்பட்டுள்ளதுடன் அவருக்கான தண்டனை எதிவரும் 27ம் திகதி அமெரிக்க நீதிமன்றினால் வழங்கப்படவுள்ளது.

அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதுடன் 235 தொடக்கம் 293 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்குமாறு அரச தரப்பு சட்டத்தரணிகள் கோரியுள்ளநிலையில் தனக்கான தண்டனையை குறைத்துவழங்குமாறு அவர் கோரியுள்ளார்.

இதற்கிடையில், ராஜ் ராஜரட்னத்தின் தண்டனைக் காலத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை அவரது ஆதரவாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

ராஜ் ராஜரட்னத்தினால் பொது நற்பணி அமைப்புகளுக்கு அவரது சொந்த நிதியில் இருந்து 45 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது

நீண்டகால சிறைத்தண்டனையான மரண தண்டனைக்கு நிகராக அமையும் எனவும் இது குற்றத்தின் தீவிரத்தன்மையை மிகைப்படுத்துவதாக அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உலகின் மிகப்பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவராக விளங்கிய, 54 வயதான ராஜ் ராஜரட்ணம் அமெரிக்க சமஷ்டி விதிமுறைகளின்படி பதினைந்தரை முதல் பத்தொன்பதரை வருடகால சிறைத்தண்டனையை எதிர்நோக்குவதாக வழக்குத்தொடுநர்கள் தெரிவித்துள்ளனர்.

நியூயோர்க்கிலுள்ள மாவட்ட நீதிமன்றமொன்றின் நீதிபதி ரிச்சர்ட் ஹோல்வெல் செப்டெம்பர் 27 ஆம் திகதி ராஜரட்னத்திற்கான தண்டனையை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நீதிபதி அமெரிக்க சமஷ்டி விதிமுறைகளை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

1 comments :

Anonymous ,  August 10, 2011 at 5:34 PM  

cheaters like Raj Rajaratam should be given maximum pinishment. Punishment should be increased not decreased. It shoulod be a lesson to such cheaters in future.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com