இராணுவத்திற்கு எதிரான நடவடிக்கையில் இஸ்லாமியக்குழுக்கள்: பெளத்த நிலையம்
சிறிலங்காவைச் சேர்ந்த இஸ்லாமியத் தீவிரவாதக் குழுக்கள் இன்று பயங்கரவாதிகளாக மாறிவிட்டனர் என்றும் இதனால் சிங்கள தேசத்துக்குப் பாதுகாப்புப் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் சிங்கள ராவய பௌத்த நிலையம் என்ற அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது
நேற்று கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவுக்கு முன்னால் இடம்பெற்ற இந்த அமைப்பின் ஆர்ப்பாட்டப் பேரணியிலே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டு கோஷம் எழுப்பப்பட்டது.
கிறீஸ் பூதங்களைச் சாட்டாக வைத்து சிறிலங்கா இராணுவ முகாம் அமைந்துள்ள பிரதேசங்களில் பிரச்சினைகளைத் தோற்றுவித்து அமைதி இன்மையை ஏற்படுத்தவும் முஸ்லிம் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர் எனவும் அந்த அமைப்பு அங்கு கோஷமிட்டனர்.
1 comments :
naattai naasamaakkum group ithuthaan. ivarkalukku yaaraavathu oruvaroodu sandai pidiththukkondu naattai pinnookki thalla vendum. srilanka melum munnera vendum enraal ippadiyaanavarkalai (sinhala raavaya pouththa amaippu) muthalil ulle thalla vendum.appathaan naattil moovina makkalum nimmathiyaaka vaalvaarkal.
Post a Comment