Sunday, August 21, 2011

தயான் ஜெயத்திலக பிரிவினைவாதத்திற்கு ஆதரவாக செயற்படுகின்றார். ஹெல உறுமய

பிரான்ஸுக்கான இலங்கைத் தூதுவர் தயான் ஜயதிலக பிரிவினைக்கு ஆதரவாகச் செயற்படுவதாக ஜாதிக ஹெல உறுமயவின் உத்தியோகப்பற்றற்ற பேச்சாளர் மலிந்த செனவிரத்ன குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக சிறிலங்கா கார்டியனில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் தூதுவர் ஜயதிலக இந்தியாவுக்குச் சார்பாக இயங்குவதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக் கப்பட்டுள்ளது.

மேலும் அக்கட்டுரையில் தயான் ஜயதிலக்க இந்தியாவிற்கு பயந்து பணியாற்றும் ஒரு நபர் எனவும், 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக ஈழ நாட்டின் எல்லைக் கோடுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், தூதுவர் தயான் ஜயதிலக்க தற்போது அந்த எல்லைக் கோடுகளை வரையும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தயான் ஜெயதிலக்கவின் நாட்டைக் காட்டிக்கொடுப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் மிலிந்த சேனவிரத்ன அச்சுறுத்தல் ரீதியில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தயான் ஜயதிலகவின் புத்தி ஜீவி துரோகத்தனத்தை ஏற்றுக் கொள்வதற்கு நாடு தயாராக இருக்கவில்லை எனவும் மலிந்த செனவிரத்ன தெரிவித்துள்ளார். ஜாதிக ஹெல உறுமயவின் ஆதரவாளர்கள் தயான் ஜயதில கவுக்கு எதிராகக் கையயெழுத்து வேட்டையிலும் இறங்கியுள்ளனர்.

தயான் ஜயதிலக ஆரம்பத்தில் ஓர் இடதுசாரி சிந்தனையில் இருந்தவர் என்ற போதும் பின்னர் ஒரு பேரினவாத சிந்தனை சார்ந்தே தன்னை மாற்றிக் கொண்டவர். எனினும் அவ்வப்போது 13 ஆவது திருத்தச்சட்டத்தை ஆதரித்தும் பிராந்திய வல்லரசான இந்தியாவைப் பகைத்துக் கொள்வதால் இலங்கைக்கு ஏற்படக் கூடிய இழப்புக்கள் குறித்தும் எழுதி வருவதாலேயே ஜாதிக ஹெல உறுமய அவரை எதிர்த்து வருவதாக நம்பப்படுகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com