Friday, August 19, 2011

சம்பந்தனே இலங்கையிலுள்ள பயங்கரமான தமிழ் இனவாத அரசியல்வாதியாவார். திவயின

இலங்கையில் இன்று இருக்கக் கூடிய பயங்கரமான தமிழ் இனவாதத் அரசியல்வாதி சம்பந்தனேயாவார். அவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் புலிப் பயங்கரவாதிகளுக்கு பயந்து இனவாத அரசியலை மேற்கொண்டதாக யாராவது தர்க்கித்தாலும் இன்று புலிகள் இல்லாத நிலையில் அவருக்கு யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது என்று பேராசிரியர் நலிந்த சில்வா 'திவயின' பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த கட்டுரையில் இடம் பெற்ற முக்கிய சில பகுதிகள் இங்கு தரப்படுகிறது. புலிகள் இயக்கம் தோற்றம் பெறுவதற்கு போலி சிங்கள இனவாதம் காரணமல்ல. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பின் ஆங்கிலேயரின் ஆதரவுடன் இங்கு செயற்பட்ட ராமநாதன், அருணாசலம், ஜி.ஜி.பொன்னம்பலம், செல்வநாயகம் போன்ற தமிழ் தலைவர்களே காரணமாவர்.

அது போலவே இன்று ஆங்கிலம் பேசக் கூடிய தமிழ் இனவாதியான சம்பந்தன் செயற்படுவது மேலைத்தேய நாடுகளின் உதவியுடன் எதிர்காலத்தில் இன்னொரு புலிகள் இயக்கத்தை தோற்றுவிப்பதற்கேயாகும்.

புலிகள் இயக்கத்தை பயன்படுத்தி தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள தமிழர் கூட்டமைப்பு நினைத்தாலும் புலிகள் இயக்கம் அவர்களுக்காக கடைக்கு போகவில்லை. தமிழ் மக்கள் அச்சுறுத்தல்களுக்கு ஆளானது போலி சிங்கள இனவாதத்தினால் அல்ல. இது போன்றவர்களின் குலபேதவாதம் மற்றும் பிரபுத்துவ வாதத்தித்தினாலாகும். இதன் காரணமாக புலிகள் சில தமிழ் தலைவர்களை கொலை செய்தார்கள்.

சம்பந்தன் புலிகளை ஆதரித்தார் புலிகள் கூறியதை செய்தார். சம்பந்தன் புலிகளின் சார்பில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்தார். அதன் காரணமாக அவர் கொலை செய்யப்படவில்லை.

புலிகள் இயக்கத்தில் சேராத சம்பந்தன் போன்றோர் வெளிநாடுகளின் உதவியோடு இன்னொரு புலிகள் இயக்கத்தை தோற்றுவிப்பதற்கு செயற்பட்டுக் கொண்டிருக்கும் போது, புலிகள் இயக்கத்திற்காக உயிரை பணயம் வைத்த கே.பி. ,தயா மாஸ்ரர், கருணா போன்றவர்கள் அரசாங்கத்துடன் இணைந்து தமிழ் மக்களின் நலனுக்காக செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

சம்பந்தன் இன்று தமிழ் இனவாதத்தினூடாக அரசாங்கத்திற்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார். அவரது அரசியல் கட்சி புலிகளின் பாராளுமன்ற கட்சியாகியுள்ளது.

ஆயினும் அந்த கட்சியில் உள்ள சிலர் உண்மையை புரிந்து கொண்டுள்ளனர்.

சேனல்-4 தொலைக்காட்சி அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளும் பொய் பிரசாரங்களுக்கு சம்பந்தன் உதவி செய்து வருகிறார். அவர் பொலிஸ் அதிகாரம் கேட்பது இறுதியில் தமிழீழத்திற்கு பாதை அமைப்பதற்கேயாகும்.
சம்பந்தன் மீண்டும் செவ்வநாயகம் யுகத்திற்கு சென்று இன்னொரு பிரபாகரனை உருவாக்கப் பார்க்கிறார். நந்திக் கடல்; களப்பினில் பிரபாகரனின் பிரிவினைவாத போராட்டம் தோற்கடிக்கப்பட்டுவிட்டது.

1 comments :

Anonymous ,  August 19, 2011 at 8:33 PM  

The practice of using situations unfairly to gain advantage for himself without thinking about how his actions will affect other people
a political opportunism

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com